நடிகை விஜயலெட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – சீமானின் நிலை என்னவாகும் !

0

சீமான் வழக்கை இரத்து செய்யக் கோரிக்கை நடிகை விஜயலெட்சுமி 19இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு . கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கர்நாடாக மாநிலம் பெங்களூரைச் சார்ந்த நடிகை விஜயலெட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் உறவு கொண்டு, ஏமாற்றி விட்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சில நாள்கள் கழித்து, வழக்கைத் திரும்பப்பெற்றுக் கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார். விஜயலெட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சீமான் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் விஜயலெட்சுமி கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றுவிட்டார். அதன் அடிப்படையில் என்மீது தொடரப்பட்ட வழக்கை இரத்து செய்யவேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம்நாள் நடிகை விஜயலெட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை இரத்து செய்வது தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி விஜயலெட்சுமி நீதிமன்றம் வரவில்லை. பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது 2024 மார்ச்சு மாதம் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். விஜயலெட்சுமி மீண்டும் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லை. இதனைத் தொடர்ந்து விஜயலெட்சுமி மார்ச்சு 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ரோஸ்மில்
சீமான் விஜயலட்சுமி
சீமான் விஜயலட்சுமி
4 bismi svs

இதற்கிடையில், நடிகை விஜயலெட்சுமி மார்ச்சு 5ஆம் தேதி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதில், “சீமான் என்னிடம் பேசவேண்டும் என்று பல வீடியோக்கள் அனுப்பியும் என்னிடம் பேசவில்லை. இதனால் நான் மனஅழுத்திற்கு ஆளாகி இருக்கிறேன். இன்றைக்கு மார்ச்சு 5ஆம் தேதி உயரமான மொட்டை மாடியில் நின்று பேசுகிற அளவிற்கு எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. சீமான் எனக்கு மாதம் 50ஆயிரம் வங்கிக் கணக்கில் போடுவதாக உறுதி அளித்தால்தான் கடந்த ஆண்டு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறிப் பெங்களூர் திரும்பினேன். தற்போது சீமான் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

- Advertisement -

- Advertisement -

கர்நாடகாவில் என்னை வாழமுடியவில்லை என்று வீடியோ சீமானுக்கு வீடியோ அனுப்பினால் கர்நாடகாவிலே செத்து தொலை என்று சொல்லிப் பதில் அனுப்பியுள்ளார். இன்னும் 2 நாளில் என் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன். என் சாவுக்குக் காரணம் சீமான் என்பதை எழுதி வைத்துவிட்டுத்தான் சாகப்போகிறேன். இன்னும் 2 நாளில் நான் இறந்துவிட்டேன் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாகக் கர்நாடகா காவல்துறை சீமானுக்குத் தெரிவிக்கும். அப்போது சீமான் கர்நாடகம் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும். என் மரணம் சீமான் யார்? நாம் தமிழர் கட்சி என்பது என்ன என்பது உங்களுக்குப் புரிந்துவிடும். எனக்கு ஆதரவு கொடுத்த தமிழ் மீடியாக்களும் மக்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

நடிகை விஜயலெட்சுமி வரும் மார்ச்சு 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அடுத்து என்ன நிகழும்? சீமான்-நடிகை ஜெயலெட்சுமி குறித்த பாலியல் சர்ச்சைகள் ஓயுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

– ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.