அமைச்சரின் பெயரில் அடாவடி கிராவல் மணல் கொள்ளை.. !

0

அமைச்சரின் பெயரில் அடாவடி கிராவல் மணல் கொள்ளை…சிக்கிய அரசியல் புள்ளி!

மலைக்கோட்டை மாவட்டத்தில் முறுக்குக்கு பெயர் போன ஊரின் யூனியன் தலைவராக ஆரோக்கியமான பெயரைக்கொண்ட ஆளுங்கட்சி அரசியல் புள்ளி இருக்கிறார்.

இவர் லோக்கல் சீனியர் அமைச்சருக்கு வேண்டப்பட்டவன் என்றுக்கூறி கனிமவளக் கொள்ளையில் தாருமாறாக பூந்து விளையாடுகிறாராம்.

அதன் உச்சக்கட்டம் பட்டா இடத்தை ஒன்றினைக் காட்டி அரசு அனுமதி வாங்கிவிட்டு, வேறொரு இடத்தில் கிராவல் மணலை கொள்ளையடித்து 7 மாவட்டங்களுக்கு விற்கிறாராம்.

இந்த தகவல் கனிமத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்து சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட, அதிகாரிகள் அனைவரும் வாயடைத்து போனார்களாம்.

காரணம், சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளி மணல் அள்ளுகிற பெயரில் மிகப்பெரிய சுரங்கமே தோண்டி வைத்துள்ளாராம்.

அதன்மூலம் லோக்கல் ஸ்டேஷனில் ஒரு லாரியை கையும் களவுமாக ஒப்படைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

-ஜித்தன்

Leave A Reply

Your email address will not be published.