விருதுநகரில் ரூ.75 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் மற்றும் டிரைவர் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகரில் ரூ.75 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை  உதவி ஆய்வாளர் மற்றும் டிரைவர் கைது !விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆங்கில மருந்து கடை நடத்தி வருபவர், ஆனந்தராஜ் (55) இவரது கடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் தயாநிதி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர், ஆய்வில் இவரது கடையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு விதியின்படி ஊதியம் வழங்கவில்லை என சம்மன் வழங்கியுள்ளனர்,

பின்னர் ஆனந்தராஜ் உதவி ஆய்வாளர் தயாநிதியை நேரில் சென்று சம்மன் தொடர்பாக பேசியுள்ளார்,அப்போது இந்த சம்மன் மேலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை எடுக்காமல் இருக்க ரூ.1 ஒரு லட்சம் இலஞ்சம் கேட்டுள்ளார், இறுதியாக ரூ.75 ஆயிரம் கொடுக்குமாறு தொழிலாளர் உதவி ஆய்வாளர் தயாநிதி தெரிவிக்கவே பணத்தை தயார் செய்துவிட்டு வருகிறேன் என வந்துள்ளார்,பின்னர் இலஞ்சப் பணம் கொடுக்க மனம் இல்லாத ஆனந்தராஜ் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்,

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

அவர்களின் அறிவுறுத்தலின்படி மே 6 நேற்று தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் தொடர்பு கொண்ட ஆனந்தராஜ் பணத்தை தயார் செய்து விட்டேன் எப்போது கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார், மறுபுறம் பேசிய தயாநிதி மாலை தங்களிடம் நேரில் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் மாலை ஆனந்தராஜிடம் தொடர்பு கொண்ட தயாநிதி என்னுடைய கார் ஓட்டுநர் மணிவண்ணன் வருவார் அவரிடம் அந்த பணத்தை கொடுக்கும்படி தெரிவித்துள்ளார், சரியாக இரவு 9 மணி அளவில் ரசாயனம் தடவப்பட்ட லஞ்சப் பணத்தை வாங்கிய கார் ஓட்டுநர் மணிவண்ணனை மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் முதலில் மணிவண்ணனையும் பின்னர் காரில் இருந்த தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் தயாநிதியையும் கைது செய்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

– மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.