வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ! வரிசையில் நின்று வாக்களித்த வக்கீல்கள்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன், செயலாளராக சி. முத்துமாரி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். இப்போது 136 -வது தலைவர் , செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் இரண்டு பேர், இணைச் செயலாளர்கள் இரண்டு பேர், செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Bar Association Electionஇதில் தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியன், தனபால் ஆகிய இரண்டு பேரும், செயலாளர் பதவிக்கு தீனதயாளன், ஆரோக்கியசாமி, ராஜா, கண்ணன் ஆகிய நான்கு பேரும், பொருளாளர் பதவிக்கு சுதர்சன், பிரதீப் ஆகிய இரண்டு பேரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு மதியழகன், புவனேஸ்வரி உட்பட பலரும், இதேபோல் இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவரது ஆதரவு வழக்கறிஞர்கள் தீவிரமாக நோட்டீசுகளை வழங்கி வாக்கு சேகரித்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வக்கீல்கள் சங்க தேர்தலை ஒட்டி திருச்சி நீதிமன்ற வளாகமே இன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.