பேப்பர் கடைக்காரர்களுக்கு வாய்த்த பெரிய அதிர்ஷ்டம் !
பஸ்டாப்ல ரொம்ப கூட்டமா இருக்கே குறையட்டும்னு பக்கத்துல இருந்த ரெகுலரா போய்ட்டு வர புக் ஷாப் போனேன். ஏதாவது ஒரு புக் எடுப்போம் வாங்க முடிஞ்சா வாங்கிக்கலாம் என்று பார்த்துட்டு இருந்தேன்.
ஒரு பெரியவர் வந்தார் அங்கு வைத்திருந்த “அக்னிச் சிறகுகள்” புத்தகம் எடுத்து பிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று திரும்பிப் பார்த்தேன் . நமக்கு தான் வாயி பிறவியிலே நீளமா இருக்கே 😁
ஐயா நீங்க புத்தகம் வாசிப்பீங்களா கேட்டேன். அவர் கைகளில் வைத்திருந்த அந்த புக்கு வேணுமா வாங்கித் தரட்டுமா கேட்டேன். முன்னாடியெல்லாம் வாசிச்சிட்டு இருந்தேன் இப்போ வாசிக்கிறது இல்ல என்றார். ஏன் என்னாச்சு கேட்டேன். கண்ணு சரியா தெரியமாட்டேங்குது நேரமும் கிடைக்கிறது இல்ல என்றார்.
சரி எந்த மாதிரி புக்ஸ் வாசிச்சிருக்கீங்க கேட்டேன்.
“ராஜேஷ்குமார்” புத்தகங்கள் நிறைய வாசிச்சிருக்கேன் என்றார். அப்புறம்
“தமிழ்வாணன்” தெரியுமா என்றார். இல்லை எனக்கு தெரியல என்றேன்.

எனக்கு புதுசா இருந்துச்சு எல்லாரும் ‘பொன்னியின் செல்வன்’ இந்த மாதிரி புக்ஸ் சொல்வாங்க இவரும் அதைத்தான் சொல்வாரு நினைத்தேன். ஆனால் அந்த மாதிரி புத்தகங்கள் எனக்கு பிடிக்கிறது இல்லனு சொன்னாரு.
சரி ராஜேஷ்குமார் புத்தகம் ஏதாச்சும் உங்களுக்கு புடிச்சது சொல்லுங்க என்றேன். அதெல்லாம் மறந்துடுச்சு மா அப்பப்போ படிச்சு எடுத்து வைத்துவிடுவேன் அவ்வளவு தான் என்றார்.
நீங்க என்ன பண்றீங்க என்றேன்.
பேப்பர் கடை வைத்துள்ளேன் என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புத்தகக் கடைக்காரர்களுக்கும் பேப்பர் கடைக்காரர்களுக்கும் வாய்த்த ஒரு பெரிய அதிர்ஷ்டம் இதுதான். ஐயா உங்கள ஒரு போட்டோ எடுத்துக்குறேன்னு கேட்டுட்டு எடுத்தேன். இரண்டு புத்தகங்களை எடுத்து போஸ் குடுத்துட்டு வரேன்ம்மா பாய் சொல்லிட்டு கிளம்பிவிட்டார்.
ஒரு புத்தகம் வாங்கிட்டு ஒரு டீயும் இரண்டு ரஸ்க்கும் சாப்பிட்டு நடைய கட்டியாச்சு…!! ♥️
– சரண்யா, டிஜிட்டல் படைப்பாளி.