அங்குசம் பார்வையில் ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்

0

அங்குசம் பார்வையில் ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்

தயாரிப்பு : ‘ ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் டைரக்ஷன் : ஜோ கியோவனிசிங். நடிகர் – நடிகைகள் : ரியோராஜ் ஜோ கியோவனி சிங், ஜைனீஷ், குணாளன், நபிஷா ஜூலாலுதீன், மூன்நிலா. தொழில் நுட்பக் கலை ஞர்கள் ஒளிப்பதிவு: சலீம் பிலால் ஜிதேஷ், இசை : பிரவீன் விஸ்வா மாலிக் எடிட்டிங்:ராம் மணிகண்டன். பி.ஆர்.ஓ. நிகில் முருகன்
2 dhanalakshmi joseph
4 bismi svs

சினிமா எடுப்பதாகச் சொல்லி சில லட்சங்களை தன்னிடம் ஆட்டயப் போட்ட மதுரையைச் சேர்ந்த டைரக்டர் ஒருவரைப் போட்டுக்தள்ள சிங்கப்பூரிலிருந்து வருகிறார் ஜோ, தமிழ்நாட்டிற்கு வந்த இடத்தில் [அது எந்த இடம்னு நமக்குத் தெரியல) மெடிக்கல் ஷாப்காரர் ஒருவருடன் நட்பு ஏற்படுகிறது. ஜோவுக்கு சில மாத்திரைகளை கொடுக்கிறார். அந்த மாத்திரயைச் சாப்பிட்டு படுக்கிறார், அதன் பின் கதை சிங்கப்பூரில் நடக்குது.  வீடியோ கேம் பார்த்துவிட்டு, அதில் வருவது போல் வீடுகளில் கொள்ளையடிக்கும் அக்கா -தம்பி. இவர்களுக்கு ஒரு அப்பா. அந்த அக்காவுக்கு ஒரு லவ்வர். அந்த லவ்வரு சிங்கப்பூரு போலீஸ்காரரு. அவரு ஒரு சைக்கோ சொலைகாரனைத் தேடிக்கிட்ருக்காரு. ஒரு பெரிய பேக்ல 2,000 ரூபாய் இந்தியநோட்டுக்கட்டுகளுடன், ஒரு வீட்டுக்குள்ள பதுங்குறாரு அக்காவோட தம்பி. அந்த வீட்டுக்குள்ள ஒரு சைக்கோ கொலைகாரன் இருக்கான்.

- Advertisement -

- Advertisement -

அவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு தம்பி. திடீர்னு ஒருத்தன் அந்த வீட்டுக்குள்ள வர்றான். சைக்கோவும் இவனும் கட்டிப்புரண்டு சண்டை போடுறாய்ங்க. கட் பண்ணா.. ரோட்ல போய்க்கிட்டிருந்த ஜோவை குபீர்னு குறுக்க புகுந்து மறிச்ச அக்காவோட லவ்வர் போலீசு, நீ தான் சைக்கோ கொலை காரன் அப்படிங்குறாரு. “” ஆ… ” ன்னு அலறியபடி பெட்ல இருந்து எந்திரிக்குறாரு ஜோ.அதுக்கப்புறம் தான் நமக்கே தெரிஞ்சது, இதெல்லாமே ஜோவுடைய கனவுல வந்திருக்கு, க்ளைமாக்ஸ்ம் வந்திருக்குன்னு. டைட்டிலையே ப்ரோக்கன் ஸ்க்ரிப்ட் ‘ னு வச்சாச்சு. அதுக்கப்புறமும் ஸ்க்ரிப்ட்டை கண்ட மேட்டிக்கு கண்டதுண்டமா ‘ப்ரோக்’ பண்ணலேன்னா எப்படி?

-மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.