மறுபடியும் முதல்ல இருந்தா…?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

காவிரிப் பிரச்சினையானது நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல்வேறு படிகளைத் தாண்டி நடுவர் மன்றம் என்ற நிலைக்கு வந்தது. பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்ததன் விளைவாக இனி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறுதியான சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒன்றிய அரசுகள் சட்டப்படியான காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தரவில்லை.இந்நிலையில் தமிழ்நாடு அரசு மூன்றுவித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழகன்
தமிழகன்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

1 உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்

2.ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

3.தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டமன்றத் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சித் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும்.

இதை விடுத்து கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. இத்தனைக் காலம் போராடி பெற்ற சட்டரீதியான அமைப்பகளும் உரிமைகளும் கேள்விக் குறியாகிவிடும். மீண்டும் பிரச்சினையை ஆரம்ப இடத்திற்கே கொண்டு செல்வதாய் அமையும். இது கர்நாடகத்துக்கு சாதகமாகவே இருக்கும். இந்த தவறான நடவடிக்கை கடுமையானப் பின்னடைவைத் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும்.

வழக்கறிஞர் தமிழகன்,

மாநில அமைப்பாளர்,

நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.