வென்றது திரைப்பட அரசியல் !

கூட்ட நெரிசலில் செத்துப் போனான்
என் புள்ள….
பரவாயில்லை
அதனால் என்ன?
தளபதியை பக்கத்துல பாக்குற
பாக்கியம் கெடச்சது !

• தவமிருந்து பெத்தெடுத்த….
ஆசை ஆசையாய்
வளர்த்த புள்ளைங்க….
கண்ணு முன்னாடியே
செத்துப் போனது…
அதனால் என்ன?
தளபதி தான் அடுத்து நமக்கு!
அவருக்குத்தான் எங்க வாக்கு!

• அக்காவாய்… தங்கையாய்…
தேவைப்பட்டால் மனைவியாய்…
கூட அண்ணனுக்கு
நாங்கள் இருப்போம்…..

• சோற்றில் விஷம் வச்சு.
பிள்ளைகளை கொன்னுட்டு
நாங்களும் செத்துப் போவோம்…

இப்படி நிலைமறந்த…
ஆட்டு மந்தைகளாய்…
மாற்றப்பட்ட….

என் தமிழ் தலைமுறையே…
வரலாறு மறந்தாயோ…

• இனம், மொழி தொடங்கி…..
அரசியல் அதிகாரம் வரை…..
தமிழ்நாட்டின்
வரலாறு மறந்தாயோ…
விடுதலைப் போரின்
வீர மரபை….
மறந்தாயோ …..
என் தமிழ் தலைமுறையே…..

இப்போதுதான்
அச்சம் வருகிறது
உங்களைக் கண்டு….
தமிழ் மக்களைக் கண்டு….

• சினிமா போதை
ஏற்றிய விஷம்….
நடிகன் நாடாள …
வாய்ப்பளித்த பாசிசம்….

சுய மரியாதைக்கு…
உயிர் ஈந்த தமிழ்நாடு….
சினிமா மோகத்தால்
அழிய போகுது….

தன்மானம் உள்ளவர்களே…
என்ன செய்யப் போகிறீர்கள்?
—  செ.கார்க்கி

Comments are closed, but trackbacks and pingbacks are open.