தேவேந்திரகுல வேளாளர்கள் திமுகவிடம் எதிர்பார்ப்பது என்ன ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட 110 மாவட்டங்களில்   தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதிகள் . இதில் குறைந்தது 6 பேருக்காவது மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் எழுந்திருக்கிறது.

1) தூத்துக்குடி வடக்கு

இந்த வார அங்குசம் வார இதழில்…

விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 2 தொகுதிகளில் மொத்த வாக்காளர் 4.44 இலட்சம் . தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் மட்டும் 74,000 வாக்குகள். விளாத்திகுளம் தொகுதியில் 34,000 வாக்காளர்கள். கோவில்பட்டி தொகுதியில் 40,000 வாக்காளர்கள்.

2)  தூத்துக்குடி மத்திய

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்( தனி ) ஆகிய இரண்டு தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 4.09 லட்சம். இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் மொத்த வாக்குகள் 89,000. தூத்துக்குடி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் -20,000 வாக்குகள்.  ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகம்  69,000 வாக்குகள்.

3)  தென்காசி மேற்கு

( வாசுதேவநல்லூர் (தனி),  கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 4. 96 இலட்சம். இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் 1.13 இலட்சம். கடையநல்லூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் -42,000.  வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -71,000.

4)  விருதுநகர் மேற்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி),  ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் 4.35 இலட்சம்.  இந்த இரண்டு தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள்  மொத்தம் -80,000.  ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள்-36,000.  ராஜபாளையம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -34,000.

5)  இராமநாதபுரம் மேற்கு

பரமக்குடி (தனி ), முதுகுளத்தூர்  ஆகிய தொகுதிகளில்  மொத்த வாக்காளர் 5.32 இலட்சம்.  இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள்  மொத்தம் -1.32 இலட்சம்.  பரமக்குடி (தனி) தொகுதியில் தேவேந்திரர் குல வேளாளர் சமூக வாக்குகள் 62,000. முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள்- 70,000.

6)  சிவகங்கை  தெற்கு

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிவகங்கை, மானாமதுரை (தனி)) ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் 5.34 இலட்சம்.  இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள்  மொத்தம் -55,000. சிவகங்கை தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -15,000. மானாமதுரை( தனி) தொகுதியில்  தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -40,000 .

7)  திருவாரூர் தெற்கு

மன்னார்குடி திருத்துறைப்பூண்டி (தனி ) ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் 4.57 இலட்சம். இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் மொத்த வாக்குகள்-87,000.  மன்னார்குடி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -24,000. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -63,000.

8)  திருச்சி கிழக்கு

லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளில்  மொத்த வாக்காளர் -4.45 இலட்சம்.  இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் வாக்குகள் -75,000. லால்குடி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக வாக்குகள்-32,000.  மணச்சநல்லூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -43,000.

 9) திருச்சி வடக்கு

துறையூர் (தனி),  முசிறி  ஆகிய தொகுதிகளில்மொத்த வாக்காளர் 4.22 இலட்சம்.  இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -74,000. துறையூர் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -32,000. முசிறி தொகுதியில் தேவேந்திரர் குல வேளாளர் சமூக வாக்குகள்  42,000.

10)  திருச்சி மத்தியம்

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர்-7.41 லட்சம்.  இந்த மூன்று தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -87,000. திருச்சி கிழக்கு தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் -10,000.  திருச்சி மேற்கு தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் -26,000.  ஸ்ரீரங்கம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -51,000.

 11) கரூர் கிழக்கு

குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி ) ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் -4.24 இலட்சம். இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் மொத்தம் -63,000.  குளித்தலை தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக வாக்குகள் -20,000. கிருஷ்ணராயபுரம்  (தனி) தொகுதியில் தேவன் குல வேளாளர் சமூக வாக்குகள் -43,000.

–              அங்குசம் சிறப்பு செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.