திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட 110 மாவட்டங்களில் தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதிகள் . இதில் குறைந்தது 6 பேருக்காவது மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் எழுந்திருக்கிறது.
1) தூத்துக்குடி வடக்கு
விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 2 தொகுதிகளில் மொத்த வாக்காளர் 4.44 இலட்சம் . தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் மட்டும் 74,000 வாக்குகள். விளாத்திகுளம் தொகுதியில் 34,000 வாக்காளர்கள். கோவில்பட்டி தொகுதியில் 40,000 வாக்காளர்கள்.
2) தூத்துக்குடி மத்திய
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்( தனி ) ஆகிய இரண்டு தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 4.09 லட்சம். இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் மொத்த வாக்குகள் 89,000. தூத்துக்குடி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் -20,000 வாக்குகள். ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் 69,000 வாக்குகள்.
3) தென்காசி மேற்கு
( வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 4. 96 இலட்சம். இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் 1.13 இலட்சம். கடையநல்லூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் -42,000. வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -71,000.
4) விருதுநகர் மேற்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் 4.35 இலட்சம். இந்த இரண்டு தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் மொத்தம் -80,000. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள்-36,000. ராஜபாளையம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -34,000.
5) இராமநாதபுரம் மேற்கு
பரமக்குடி (தனி ), முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் 5.32 இலட்சம். இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் மொத்தம் -1.32 இலட்சம். பரமக்குடி (தனி) தொகுதியில் தேவேந்திரர் குல வேளாளர் சமூக வாக்குகள் 62,000. முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள்- 70,000.
6) சிவகங்கை தெற்கு
சிவகங்கை, மானாமதுரை (தனி)) ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் 5.34 இலட்சம். இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் மொத்தம் -55,000. சிவகங்கை தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -15,000. மானாமதுரை( தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -40,000 .
7) திருவாரூர் தெற்கு
மன்னார்குடி திருத்துறைப்பூண்டி (தனி ) ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் 4.57 இலட்சம். இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் மொத்த வாக்குகள்-87,000. மன்னார்குடி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -24,000. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -63,000.
8) திருச்சி கிழக்கு
லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் -4.45 இலட்சம். இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் வாக்குகள் -75,000. லால்குடி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக வாக்குகள்-32,000. மணச்சநல்லூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -43,000.
9) திருச்சி வடக்கு
துறையூர் (தனி), முசிறி ஆகிய தொகுதிகளில்மொத்த வாக்காளர் 4.22 இலட்சம். இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -74,000. துறையூர் (தனி) தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -32,000. முசிறி தொகுதியில் தேவேந்திரர் குல வேளாளர் சமூக வாக்குகள் 42,000.
10) திருச்சி மத்தியம்
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர்-7.41 லட்சம். இந்த மூன்று தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -87,000. திருச்சி கிழக்கு தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் -10,000. திருச்சி மேற்கு தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் -26,000. ஸ்ரீரங்கம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் -51,000.
11) கரூர் கிழக்கு
குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி ) ஆகிய தொகுதிகளில் மொத்த வாக்காளர் -4.24 இலட்சம். இந்த இரண்டு தொகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் மொத்தம் -63,000. குளித்தலை தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக வாக்குகள் -20,000. கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் தேவன் குல வேளாளர் சமூக வாக்குகள் -43,000.
– அங்குசம் சிறப்பு செய்திக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.