திருச்சி உள்ளிட்ட 17 மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்ற தயார் ஆகும் திமுக தலைமை !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

திருச்சி உள்ளிட்ட 17 மாவட்ட செயலாளர்களை அதிரடி மாற்றுவதற்கு தயார் ஆகும் திமுக தலைமை !

எம்.பி. தேர்தல் 2024க்கு  தயாராகும் வகையில் திமுக கட்சியில் அதிரடி நடவடிக்கையாக 17 மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

செம்ம சூப்பரான திரைப்படம்..

தமிழகத்தில் சமீபத்தில்  மதுரை மாநகர் மாவட்டத்தில் மாநில தீர்மான குழு செயலாளராக இருந்த அக்ரி கே.பி.டி கணேசன் என்பவர் தனது பதவியில் இருந்து விலகி கொள்வதால், அவருக்கு பதிலாக பி.அறிவுநிதி என்பவர் நியமிக்கப்பட்டார். .

அதே போன்று தென்காசி மா.செ. பொறுப்பில் இருந்த சிவபத்மநாதனை நீக்கிவிட்டு நகரசெயலாளர் ஜெயபாலனை மா.செ.வாக நியமிக்கப்பட்டார்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இது போன்று   அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் , இன்றும் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் என இரண்டு, மூன்று  பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்து அவருக்கு வேண்டும் என்கிற பதவி விட்டுக்கொடுக்கப்பட்டு மற்ற பதவிகள் அனைத்தும்  பறிக்கப்படுகிறது.  அதற்கு பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து மண்டல பொறுப்பாளராக அல்லது வேறு கௌரவ பதவி வழங்கப்பட உள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் நான்கு முதல் ஆறு சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன. அதற்கு மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் ஒருவரை இருப்பதால் அவர்களால் கட்சிப் பணிகளை அரசு பணிகளையும் சரி வர செய்ய முடியவில்லை இது அதுபோன்ற உள்ளவரிடம் இருந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

திருச்சி, கரூர் ,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கோவை, கிருஷ்ணகிரி நாமக்கல், தேனி, தஞ்சை உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மாற்றப்படும் பட்டியலில் உள்ளது என்கிறார்கள்.

7
5

பூத் கமிட்டிகளில் கூட்டத்தில்  பேசிய மு.க.ஸ்டாலின் சில மாவட்ட செயலாளரின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் செயல்பாடுகளை விமர்சித்தார். கடுமையாக  எச்சரித்தார்.

புது உறுப்பினர்களின் சேர்க்கையை சரிவர முடியாதவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் பணிகளில் சுணக்கம் காட்டியவர்கள், கலைஞர் நூற்றாண்டு விழாவை பெரிய அளவில் நடக்காதவர்கள், என ஒரு பெரிய பட்டியலை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் ”களை” எடுக்கப்படலாம் என்றும் சிலர் கடுமை எச்சரிக்கை பின்னர் பதவி நீட்டிப்பு  செய்யப்படலாம் என்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

எம்.பி. தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காக அதற்கு ஏற்றார் போல்  நிர்வாகிகளை கட்சியின் அனைத்து மட்டத்திலும் நியமிக்க இப்பவே திட்டமிடுகிறார்.

ஒரு சில மாவட்டங்களில் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர் பதவி துடிப்பான இளைஞர்கள் கையில் ஒப்படைத்தால் கட்சிக்கு இன்னும் பலமாக இருக்கும் உதயநிதிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார்.

மேலும் சில மாவட்ட செயல்களை மாற்றுவதால் மற்றவர்கள் தங்களின் பதவியை தக்க வைக்க எம்.பி. தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவார்கள். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில்  சீட்டு கிடைக்கும் என நம்பிக்கையை புதிதாக பொறுப்பு வருபவர்கள் கட்சிப் பணிகள் தீவிரமும் ஆர்வம் காட்டுவர்.

திருச்சியை பொறுத்தவரையில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அமைச்சரின் வாரிசுக்கு அந்த யோகம் அடிக்கிறது என்கிறார்கள்.

6
Leave A Reply

Your email address will not be published.