அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மற்றவர்களின் கண்ணீரை கேமராவில் பதிவு செய்யாதீர்கள் … அது கொடூரமானது !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இரண்டு மூன்று நாட்களாக முகநூல், இன்ஸ்டா என எதைத் திறந்தாலும் யாழினி என்கிற பெண்ணுக்கு எல்லாரும் அட்வைஸ் செய்துகொண்டுள்ளார்கள். அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்னவென்று பார்த்தால், காதல் உறவில் பிரிவும் அதனால் உண்டான மனச்சிக்கலும் தான்.

ஒரு பெண் பொதுவெளியில் வந்து எனக்கு காதல் தோல்வி என அழுவது நம் சமூகத்துக்கு புதிது. பெண் காதல் தோல்வியை, ஒரு உறவில் பிரிவை முழுங்கிப் பழக்கப்பட்ட வளாகத்தான் தமிழ் இலக்கியமும் 100 ஆண்டுகால சினிமாவும் காண்பித்திருக்கிறது. அது ஓரளவு உண்மையுங்கூட!

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

ஆனால், சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கும். தாய், தந்தையை இழந்த வலி, உடன் பிறந்தாரை இழந்த வலி, நட்பை இழந்த வலி, தொழிலில் சந்தித்த துரோகத்தின் வலி என எத்தனையோ வலி இருந்துகொண்டே தான் இருக்கும். எல்லா வலிக்கும் நிகழ்ச்சி நடத்துமா விஜய் டிவி?

காதல் வலி என்றால் அது புனிதமானது; உயர்வானது என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள் காலங்காலமாக. ஆனால், Pain is personal. இன்றைக்கு இருக்கும் வலி கால ஓட்டத்தில் எப்படியேனும் கரைந்து போகும். அதுதான் மனித வாழ்வின் அற்புதம்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

டிவி நிகழ்ச்சியில் அந்தப் பெண் அப்படி அழுகிறாள். அது அவளுடைய இன்றைய மனநிலை. எதிர்காலத்தில் அவள் 100 பேருக்கு  counseling கொடுக்கும் இடத்துக்கு அவள் போகலாம். அன்று இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தால் அவமானம் அவளைப் பிடுங்கித் தின்னும். எழுத்தாளர் முரகாமி சொல்வார், “pain is inevitable but suffering is your choice” . அந்த sufferingஐ தான் காட்சிப்படுத்தியுள்ளது.

மனிதன் மட்டுமல்ல எல்லா உயிர்க்கும் தன் வலியை manage செய்யத் தெரியும். இயற்கை அப்பேராற்றலை எல்லாருக்குமே தந்துள்ளது. மேனேஜ் செய்ய முடியாதவர்கள் மனநல மருத்துவர்களையோ தன் உற்ற நண்பர்களையோ அணுகி தீர்த்துக்கொள்வார்கள். விஜய் டிவி நீங்கள் காட்சிப்படுத்தியது அவர்கள்  வலியை அல்ல… அவர்களின் sufferings ஐ.

தயைகூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் pain is personal. Plz don’t put your camera on someone’s sufferings and tears. Its brutal. Thank you

—   நாச்சியாள் சுகந்தி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.