PMIS திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாட்டில் உள்ள படித்து முடித்து வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தின் (PMIS)  கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக 500க்கும் மேற்பட்ட தனியார்துறை தொழிற்சாலைகளில் 21 வயதுமுதல் 24 வயதுக்குள் உள்ளவர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியின் காலஅளவு 12 மாதங்கள். மாதந்தோறும் ஊக்கத்தொகையாகரூ.5000 மற்றும் ஒருமுறை மானியமாகரூ.6000 வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் PMIS Portal https://pminternship.mca.gov.in/login மூலம் விண்ணப்பிக்கலாம்.  இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 15.04.2025.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு
திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு

இப்பயிற்சியில் சேருவதற்கானதகுதிகள்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் நாளன்று 21-24 வயதுக்குள் இருத்தல் வேண்டும். மனுதாரர் முழுநேரம் /பகுதிநேர ஊழியராகவோ மாணவராகவோ இருத்தல் கூடாது.மனுதாரர் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது IIT அல்லது பொறியியலில் பட்டயப்படிப்பு அல்லது BA/B.Sc/B.Com/BCA/BBA/B.Pharma  ஏதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் எட்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கீழ்க்கண்டதகுதிஉடையோர் இப்பயிற்சியில் சேரதகுதியில்லை

CA, CMA, CS MBBS, BDS, MBA, PhD அல்லது ஏதேனும் முதுநிலை கல்வித் தகுதி இருத்தல் கூடாது. மத்திய, மாநிலஅரசுத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மற்றும் நடத்தப்பட்டதிறன் பயிற்சி,தொழில் பழகுநர் பயிற்சிமற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளில் கலந்து கொண்டவராக இருத்தல் கூடாது. 2023-24 ம் நிதியாண்டில் குடும்ப ஆண்டு வருமானம் 8 இலட்சத்திற்கு மேல் இருத்தல் கூடாது.விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ மத்திய மாநில அரசுப் பணியில் இருத்தல் கூடாது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இப்பயிற்சியில் சேரவிருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க திருச்சிராப்பள்ளி மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 09.04.2025 அன்று நடத்தப்படும் சிறப்பு பதிவுமுகாமில் தங்களது அனைத்துக் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, கடவுச்சீட்டுஅளவு புகைப்படம், சாதிசான்றிதழ் மற்றும் Smart Phone ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்குபயணப்படிஏதும் வழங்கப்படமாட்டாது.

மேலும், கவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு ற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 9499055901 என்ற தொலைபேசி / அலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.