அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மே.15 முதல் பிரைம் வீடியோவில் ‘எக்ஸாம்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘சுழல்-1 & 2’  ‘வதந்தி’ என இரண்டு மெகாஹிட்டான வெப் சீரிஸ்களுக்கு அடுத்து ‘வால் வாட்சர் பிலிம்ஸ் பேனரில் புஷ்க்ட்ர்-காயத்ரி தயாரித்து அதே பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வரும் மே.15-ஆம் தேதி வெளியாகிறது ‘எக்ஸாம்’ என்ற வெப் சீரிஸ். ஏ.சற்குணம் இயக்கியுள்ள இந்த சீரிஸில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். போட்டித் தேர்வுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சஸ்பென்ஸ் டிராமா ஜானரில் இதை உருவாக்கியுள்ளனர் புஷ்கரும் காயத்ரியும். ஏழு எபிசோடுகள் கொண்ட  இந்த சீரிஸ், தமிழில் தயாராகி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் உலகம் முழுவதும் பதினைந்து மொழிகளிலும்  டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.

இதுகுறித்து பிரைம் வீடியோ இந்தியாவின் தலைவர் நிகில் மாதோக் கூறும் போது, “இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான கதை இது. கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் கதை இது. மூன்றாவது முறையாக புஷ்கர்-காயத்ரியுடன் இணைந்து இதை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்” என்கிறார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புஷ்கர்-காயத்ரி கூறும் போது, “இந்த எக்ஸாம் சீரிஸில் மனிதர்களின் ஆசை, அநீதி அதனால் ஏற்படும் நெறிமுறைச் சிக்கல்களை இதில் சொல்லியிருக்கிறோம். சிக்கலான சூழலில் பலவீனமாகிவிடாமல், துணிந்து போராடும் ஒரு பெண் இருக்கிறாள். எங்களின் இது போன்ற கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களின் பார்ட்னராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி” என்கிறார்.

—    ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.