முதல்வா் கா்நாடக செல்ல கூடாது – விவசாயிகள் தா்ணா போராட்டம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  மாதந்தோறும் நடைபெறும்  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று 31-7-2026 காலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குனர், வருவாய் கோட்டாச்சியா் செல்வி.ப.நித்யா ஆகியோர்கள் முன்னிலையில் தோட்டக்கலை துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை வேளாண்மை, கால்நடை, குடிநீர் வழங்கல், வருவாய்துறை, மின்சாரம் போன்ற பல்வேறு அரசு துறையைச் சார்ந்தவா்களும் கலந்து கொண்டனர்.

thanjavur newsவிவசாயிகள் சுந்தர் விமலநாதன், வீரசேனன், தங்கவேல், AKR பிரகலாதன், கோவிந்தராஜ் போன்றவா்கள் கலந்து கொண்டனா். காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச்சங்கத் தலைவர் தர்ம.சுவாமிநாதன் அவா்கள் தலைமையில்  பல பகுதிகளில் இருந்து திரளாக  வருகை தந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவரை நோக்கி முதல்வா் விஜய் கா்நாடகம் செல்ல வேண்டாம் எனவும்,

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஊழல் செய்த நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோஷமிட்டு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக கூட்ட அரங்கின்  உள்ளே அமா்ந்து சிறிது நேரம் தா்ணா செய்து கோஷமிட்டவாறு வெளியேறினா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தா்ணாவில் ஈடுபட்டவா்களுடன் கோட்டாச்சியா் பேச வந்த நிலையில அவா்கள் தா்ணா போராட்டத்தில் இருந்து வெளியேறினா். வல்லம் காவல்துறை ஆய்வாளா் காயத்ரி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

—  தஞ்சை க.நடராசன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.