தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் புத்தகத்தில் தாங்களை திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்.. இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் புத்தகத்தில் தாங்களை திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்..
இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி

இலங்கைத் தீவானது, தொன்மைவாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள். பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகின்றது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம்வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது தொன்மை வாய்ந்த திராவிட (தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள்.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

ஈழ தமிழர்கள் - திராவிடர்கள்
ஈழ தமிழர்கள் – திராவிடர்கள்

இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில், நாகர் இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலை பெற்றிருந்ததாகச் சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன. இந்த வரலாற்றுப் பதிவேடுகளை எழுதிய பௌத்த பிக்குகள் இலங்கையின் பூர்வீக குடிகளது வரலாற்றைத் திரித்துக்கூற முற்பட்டனர்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

Apply for Admission

போரும் சமாதானமும்
போரும் சமாதானமும்

புராதனத் தமிழர்களை மானிடரல்லாதோர் என்றும் அமானுஷ்ய சக்தி வாய்ந்த அரக்கர்கள் என்றும் வர்ணித்திருக்கிறார்கள். இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளது உண்மை வரலாறானது புராணங்கள் கட்டுக்கதைகளால் மூடிமறைக்கப்பட்டபோதும், காலத்தால் முந்திய ஆதிவாசிகள் தமிழர்களே என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஈழ தமிழர்கள் - திராவிடர்கள்
ஈழ தமிழர்கள் – திராவிடர்கள்

புவியமைப்பின்படி, இத்தீவானது தென்னிந்தியாவை அண்டியதாக அமையப்பெற்றிருப்பதை நோக்குமிடத்து, வடஇந்தியப் பிரதேசமான வங்காளத்திலிருந்து விஜயனும் அவனது தோழர்களும் கடல்மார்க்கமாக வந்து இங்குத் தரையிறங்குமுன்னர் இந்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிபு.

-போரும் சமாதானமும்

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.