திமுகவுக்கு எதிர்ப்பலையா -? தமிழ்நாடு தேர்தல் களம் – நடப்பது என்ன ?

வேங்கை வயல், திருநெல்வேலி போன்ற இடங்களில் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைகளுக்குத் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைதி பூங்காவாக

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழ்நாடு தேர்தல் களம் – திமுகவுக்கு எதிர்ப்பலையா -? என்ன நடக்கிறது… !

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவைக்கு இன்னும் முழுதாக 6 மாதங்கள் இருக்கும் நிலையில், கூட்டணிகள் இறுதி செய்யப்படாத சூழ்நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசும்போது,“டிசம்பர் 17ஆம் நாள் இளைஞர் அணி மாநாட்டைச் சேலத்தில் நடத்துகின்றோம். அங்கே கொள்கை முழக்கமிடுவோம். இளைஞர் அணியினர் மக்களைச் சந்திப்பார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெற வைப்பார்கள். எங்களின் கொள்கைகளை முன்வைத்துப் பரப்புரையை மேற்கொள்வோம். திமுக இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணி தேசிய அளவில் வெற்றிபெறும். பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

எடப்பாடி தலைமையில் கூட்டம்
எடப்பாடி தலைமையில் கூட்டம்

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

அண்மையில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,“பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டது. இனி ஒட்டுமில்லை; உறவுமில்லை. சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நடந்துகொண்டிருக்கும் திமுக ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர். அதிமுகவுக்கு மக்கள் ஆதரவுஅலை பெருகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வலுவான மெகா கூட்டணி அமைக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் அதிமுக வெல்லும்” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

3

திமுகவுக்கு எதிர்ப்பலையா?

மக்களவையின் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்யும். பொதுவாக ஆளும்கட்சி என்றால் மக்கள் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்று அதிருப்தி தெரிவிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். அந்த அதிருப்தி ஆளும்கட்சிக்கு எதிராகத் தேர்தல் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதில்தான் ஆளும்கட்சிக்கான எதிர்ப்பலையை உணரமுடியும்.

4
திமுக மக்கள் நல திட்டங்கள்..
திமுக மக்கள் நல திட்டங்கள்..

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் ஏறத்தாழ 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில சான்றுகள்: ஆவின் பால் விலை குறைப்பு. அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பயணம், அரசுக் கல்லூரிகளில் படிப்பைத் தொடரும் மாணவியருக்கும் மாதம் 1,000/- ரூபாய். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் 1,000 ரூபாய். பட்டப்படிப்பு படித்தோருக்குக் குரூப் 1 தேர்வில் கலந்துகொள்ளப் பயிற்சித் தொகை 10 மாதங்களுக்கு ரூ.75,000/-, அரசு கல்லூரிகளில் முனைவர் பட்டம் செய்யும் ஆய்வாளர்களுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு ஆய்வுத்தொகை மாதம் ரூ.25,000/-, 3ஆம் வருடத்திற்கு மாதம் 28,000/- ஆதி-திராவிடர், மதம் மாறிய கிறித்தவச் சமூகம் சார்ந்தவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள ஆய்வு உதவித் தொகையாக ஆண்டிற்கு 1 இலட்சம் என்று 6 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்றது. 100 நாள் வேலைத் திட்டத்தில் நாளொன்றுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.100/- என்பது ரூ.300/- உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இது மட்டுமின்றி அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எந்த மக்கள் நலத் திட்டங்களும் புறக்கணிக்கப்படவில்லை. அதிமுகவினர் போற்றும் அம்மா உணவகம் இன்றும் தொடர்கின்றது. கலைஞர் உணவகம் இன்னும் தொடரப்படவில்லை. காரணம் அம்மா உணவகத்திற்குப் போட்டி என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்ற திமுகவின் எச்சரிக்கை உணர்வு. இவையெல்லாம் திமுகவுக்குப் பலமான ஓட்டு வங்கியைப் பலப்படுத்தும் உத்தரவாதத் திட்டங்கள்.

திமுக ஆட்சியில் குறையில்லையா?

சதவீத அளவில் மிகவும் குறைவு. குறிப்பாக அரசு ஊழியர், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் நீண்டநாள் தீர்க்கப்படாத பல கோரிக்கைகள் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக, திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளபடி, பழைய ஓய்வூதியத் திட்டம் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டும், தமிழ்நாட்டில் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களின் நிதிப் பயன்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வைத் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி அறிவிக்கின்றது. நிலுவைத் தொகைகளை வழங்க மறுக்கின்றது.

அரசு பள்ளிகளில் 10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அப் பணியிடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகின்றது. உயர்கல்வியில், கல்லூரிகளில் 2015ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கவேண்டும். தற்போது 2023ஆம் ஆண்டு வரை 10,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தற்காலிக ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

சமூகநீதியைப் போற்றும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் அரசு ஊழியர்களும், தரமான கல்வியைக் கொடுத்து நாளைய மன்னர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் திமுக அரசின் மீது நம்பிக்கையை இழக்கத் தொடங்கியுள்ளனர் என்பது உண்மைதான் என்றாலும், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்னும் அதிமுக ஆதரவு மனநிலைக்கு வரவில்லை காரணம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரச்சனைகளை அதிமுக அரசு தீர்த்து வைத்திருக்கவேண்டும். பிரச்சனை என்ன என்பதையே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். மதுக்கடைகளை மூடவில்லை என்ற குற்றச்சாட்டும் திமுக அரசின் மீது உள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவு அலையா?

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்க்கட்சி கைப்பற்றிக்கொள்ளும் என்பது அரசியல் களத்தில் இயல்பான ஒன்றுதான். ஆளும் கட்சியின் மீது அதிமுக மக்கள் நலன் சார்ந்து எந்தப் பிரச்சனைகளையும் தெளிவாக முன்வைக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அரசு பேருந்துகளில் எல்லா மகளிருக்கும் கட்டணமில்லாப் பயணம் என்றவுடன் அதிமுக தரப்பில், “அரசுப் பணிக்குச் செல்வோர், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் – இவர்களுக்கு எல்லாம் கட்டணமில்லாப் பயணம் என்பது சரியல்ல. ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது.

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் திட்டத்தில் 1 கோடி பேருக்குத் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்றவுடன், எல்லாக் குடும்பத்தலைவிகளுக்கும் வழங்கவேண்டும். தகுதி நிர்ணயம் செய்யக்கூடாது என்பதை அதிமுக வலியுறுத்தியது. திமுக அரசு 1 கோடியே 6 இலட்சம் பேருக்கு உரிமை இலக்கை மீறி வழங்கியபோது, தகுதியுள்ள பலருக்கு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம் உரிமைத்தொகை மேலும் 50,000 மகளிருக்கு வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் அம்மா உணவகம் மாற்றப்படும் என்று வதந்தியை அதிமுக பரப்பி வந்தது. இப்போதும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றது. மதுக்கடைகளைத் திமுக அரசு மூடுவோம் என்று ஆட்சியைப் பிடித்தார்கள். மூடவில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அதிமுக ஆட்சியில் ஏன் மூடவில்லை என்று திமுக கேட்கும்போது அதிமுக மௌனம் காக்கின்றது.

வேங்கை வயல், திருநெல்வேலி போன்ற இடங்களில் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைகளுக்குத் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு வன்முறை களமாக மாறிவிட்டது என்று அரசியல் ரீதியாக அதிமுக குற்றம் சுமத்தி வருகின்றது. நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக கூறியது ஆனால் நீட் தேர்வு இன்னும் ஒழிக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆனால் திமுக நீட் ஒழிக்கப்படத் தொடர்ந்து மக்கள் அரங்கத்தில் போராடிக் கொண்டிருக்கின்றது.

M.K.S Vs RN
M.K.S Vs RN

ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது என்று திமுக போராடிக்கொண்டிருக்கும் போது, ஆளுநரை எதிர்த்து அதிமுக ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப்போடாமல், ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு வெள்ளைக்கொடி வீசிவருகின்றது. இந்தச் செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிமுகவுக்குச் செல்வாக்கு அதிகரிக்கவில்லை.

ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வருவாய் தொகை தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவாகவே வழங்கி வருகின்றது. திமுக அரசோடு குரல் கொடுக்கவேண்டிய அதிமுக கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்க்கின்றது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு கூட்டணி தொடர்கின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்ற திமுகவின் கூற்று உண்மையே என்று எண்ணிடத் தோன்றுகின்றது.

மேலும் அதிமுக மெகா கூட்டணி அமைத்துத் திமுகவை வெல்லுவோம் என்று மூச்சுக்கு மூச்சு பேசிவருகின்றனர். ஆனால் இதுநாள் வரை அதிமுகவோடு கூட்டணி சேர எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை முன்வராத நிலையே தொடர்கின்றது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் வாய்ப்பே அதிகம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திமுக கூட்டணி கட்சிகள்
திமுக கூட்டணி கட்சிகள்

இறுதியாக, திமுக வெல்லமுடியாத கட்சி அல்ல என்பது உண்மைதான். திமுகவை வெல்வதற்கான மக்களவை என்னும் போர்க்களத்தில் அதிமுகவின் வெற்றி வியூகம் இன்னும் வெளிப்படவில்லை. போர்க்களத்தில் அதிமுக பயன்படுத்தும் கருத்து மற்றும் கொள்கைக் கருவிகள் கூர்மையாக இல்லை. மக்கள் மன்றத்தில் திமுகவுக்குப் பெரிய அளவுக்கு எதிர்ப்பலை இல்லை என்பதே தற்போதைய நிலை. திமுக அரசுக்கு எதிர்ப்பலையை உருவாக்கி, ஆதரவுஅலை தன்வசப்படுத்திக்கொள்ள அதிமுக முதலில் தன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பின்னர் மக்கள் மன்றத்தில் கடுமையாக உழைக்கவேண்டும்.

அதிமுக தொண்டர்கள்
அதிமுக தொண்டர்கள்

திமுகவின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தவேண்டும். அதிமுக ஆட்சியில் நடந்த பல்வேறு தவறுகளுக்கு முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இதுபோன்று அதிமுக தேர்தல் களத்தில் செயல்பட்டால் திமுகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்க முடியும். அதிமுகவால் முடியுமா? என்பதுதான் விடையில்லாத வினா.

ஆதவன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.