‘இதயம் முரளி’ டைட்டில் & டீசர் ரிலீஸ் !
Dawn Pictures-ன் 4 வது தயாரிப்பான அதர்வா முரளி நடிக்கும், ‘இதயம் முரளி’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் பிப்ரவரி 13- ஆம் தேதி வெகு கோலாகலமாக நடந்தது.
தனுஷின் ‘இட்லி கடை’ சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, ‘STR49’ படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் படமாக உருவாகும் ‘இதயம் முரளி’ மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கல்லூரியில் நடந்த விழாவினில் இப்படத்தின் டைட்டில் டீசர் திரையிடப்பட்டதும் மாணவர்களின் உற்சாக கூச்சல் விண்ணைப் பிளந்தது.
இப்படத்தின் நடிகர்கள் கல்லூரி மாணவர்களு டன் உரையாடி, பாடல்கள் பாடி, படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர். படத்தில் நடித்து வரும் நிஹாரிகா, பிரக்யா நாக்ரா, ப்ரீத்தி முகுந்தன், ஏஞ்சலின், கயாது லோஹர் உட்பட அனைவரும் பேசிய பிறகு….

இயக்குநர்& தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்
“தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி. சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதலையும் நட்பையும் ஞாபகப்படுத்தும். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி”.
நடிகர் அதர்வா
“ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். என் அப்பாவின் படமான கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி. எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர். அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார். அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும்”. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
நடிகர்கள் : அதர்வா , பிரீத்தி முகுந்தன் , கயாது லோஹர் , நட்டி , தமன் ,நிஹாரிகா , ரக்சன் , திராவிட் , ஏஞ்சலின் , பிரக்யா நாக்ரா , சுதாகர் , யாஷஸ்ரீ
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பக் குழு:
இசை – தமன் S
ஒளிப்பதிவாளர் – சி.எச். சாய்,
படத்தொகுப்பாளர் – பிரதீப் இ ராகவ்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார்
வசனம் – ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம்,
பாடல்கள் – விவேக்
நடன இயக்குனர் – ஷோபி,
ஆடை வடிவமைப்பாளர் – பல்லவி சிங்,
ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்
போஸ்ட் புரொடக்ஷன் மேற்பார்வையாளர் – நவகுணசேகர் .எம்.
விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன்
— மதுரை மாறன்.