சேலத்தில் ஐ.ஜே.கே. நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

சேலத்தில் ஐ.ஜே.கே. நிர்வாகி வெட்டி படுகொலை!
மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு!!

சேலத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாநகர் அரிசி பாளையம் வண்டி பேட்டையை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மகன் உதய சங்கர் (வயது 30 ) வெள்ளி தொழில் செய்து வந்த இவர் இந்திய ஜனநாயக கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நேற்று மாலை 6 மணி அளவில், பள்ளப்பட்டி – சூரமங்கலம் பிரதான சாலையில் உள்ள சேலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் எதிரே உள்ள கடைக்கு வந்துள்ளார். அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பலுடன் உதயசங்கர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மர்மக் கும்பல், அரிவால்களால் உதய சங்கரை சரமாரியாக வெட்டியது. அவர் தப்பி ஓட முயன்ற போதும் துரத்திச் சென்று கொடூரமாக வெட்டியது. அதில் தலை முகம் கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் உதய சங்கர் ரோட்டில் சரிந்து விழுந்தார். உதயசங்கருடன் இருந்த நண்பர் அலெக்ஸ் பாண்டி என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து அப்பகுதி மக்கள் பதறி அடித்து ஓடினர். உடனே அந்தப் பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் உதயசங்கர் மற்றும் அலெக்ஸ் பாண்டி ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் உயிரிழந்தார், உதயசங்கர். அலெக்ஸ் பாண்டி தொடர் சிகிச்சையில் இருந்துவருகிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

வெள்ளிக்கட்டி மோசடி வழக்கில் கைதாகி சேலம் சிறையிலடைக்கப்பட்டிருந்த உதயசங்கர் பிணையில் வெளி வந்த நிலையில் இப்படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஐஜேகே நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

– சோழன் தேவ்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.