ஆர்ப்பரித்து கொட்டும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! வீடியோ
ஆர்ப்பரித்து கொட்டும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! ஏலகிரி மலைப் பகுதியிலும், மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நீர்வீழ்ச்சி திருப்பத்தூரில் சுமார் 10 கி.மீ தொலைவில் ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது.மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் கடந்து நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ஏலகிரி மலையில் உருவாகும் காட்டாறானது, சடையனூரில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்தும் மலைத்தடம் வழியே சுமார் 6 கி.மீ கீழிறங்கினால் அருவியை அடையலாம். இவ்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மலையில் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் காணப்படுதால் இவ்வருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையில் பெங்களூர் சென்னை போன்ற பல்வேறு மக்கள் சென்று நீராடிச்செல்கின்றனர்.
ரயில் மார்க்கமாக ஜோலார்பேட்டை சந்திப்பில் இருந்தும் திருப்பத்தூரில் சுமார் (20 கி.மீ. ). நீர்வீழ்ச்சியை அடையலாம் சாலை வழியாக திருப்பத்தூரில் சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
-மணிகண்டன்