நியோமேக்ஸ் இயக்குநர்களுக்கு 2 நாள் போலிஸ் விசாரணைக்கு நீதிபதி அனுமதி !

1

நியோமேக்ஸ் இயக்குநர்களுக்கு 2 நாள் போலிஸ் விசாரணைக்கு நீதிபதி அனுமதி !

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர் கமலக்கண்ணன், அவரது சகோதரர் சிங்காரவேலனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருவரையும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மனு அளித்தனர். போலீஸ் தரப்பின் மனுவை விசாரித்த மதுரை நீதிமன்றம் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

கமலக்கண்ணன் - சிங்கரம்
கமலக்கண்ணன் – சிங்கரம்

இந்த போலிஸ் விசாரணையில்  நியோமேக்ஸ் கமலக்கண்ணனிடம் …  தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் Neomax க்கு இடம் உள்ளதா?,…வெளிநாடுகளில் ஹவாலா பணம்  யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறீர்கள், ?…  ஓமன், கத்தர், போன்ற வெளிநாடுகளில் யாருடன் சேர்ந்து மீட்டிங் நடத்தினீர்கள், உங்கள் பின்னால் உள்ள அதிகார பலம் யார்  இருக்கிறார்கள் அல்லது அரசியல் பின்புலம் உள்ளதா?….இதுவரை Neomax வங்கி கணக்கு 758 முடக்கப்பட்டுள்ளது வேற எந்த நாட்டில் வங்கியிலும் வேறு பெயரில் உள்ளதா?….மற்ற நிறுவனர்கள் எங்கு உள்ளார்கள்?… அடுத்து சூம் மீட்டிங்கில் எப்படி எல்லோரும் இணைப்பு செய்கிறீர்கள் என்கிற மாதிரியான கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது…

1 Comment
  1. Ram says

    Whenever there is some negative info on neomax you guys are reporting it.
    Why haven’t you informed about the fact that court agrees to appoint a committee for settlement ?

    Read your privies articles how many false allegations

Leave A Reply

Your email address will not be published.