ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை அலுவலர் மற்றும் கணக்கர் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒப்பந்ததாரரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கீழக்கரை நகராட்சி இளநிலை அலுவலர் மற்றும் கணக்கர் கைது:

 

கீழக்கரை நகராட்சி ஒப்பந்ததாரரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கீழக்கரை நகராட்சி இளநிலை அலுவலர் மற்றும் கணக்கர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Sri Kumaran Mini HAll Trichy

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்தாரராக இருந்து வருகிறார் . இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், கீழக்கரை நகராட்சி மின் மோட்டார் பழுது சரி செய்து, மின் பல்புகள், உபகரணங்கள் சப்ளை செய்த பணிகள் மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையரை அணுகி தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.62 ஆயிரத்தை விடுவிக்குமாறு கேட்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதையடுத்து இத்தொகைக்கான காசோலை விடுவிக்கும்மாறு இளநிலை உதவியாளர் உதயக்குமார், கணக்கர் சரவணன் ஆகியோரிடம்
நகராட்சி ஆணையர் செல்வராஜ் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர் முரளி உதயக்குமாரை பலமுறை நேரில் அணுகி காணோலையை கேட்டுள்ளார். அதற்கு இளநிலை உதவியாளர் தனக்கும் , கணக்கர் சரவணன் ஆகிய இருவருக்கும் சேர்த்து ரூ.2000 கொடுத்துவிட்டு காசோலை வாங்கிச் செல்லுமாறு இளநிலை உதவியாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Flats in Trichy for Sale

இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஒப்பந்ததாரா் முரளி புகார் அளித்தார்.

அதன்அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்களை முரளியிடம், கொடுத்து உதயக்குமார், சரணவனிடம் வழங்கும்மாறு லஞ்ச ஒழிப்புத்துறையனர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் அடிபடையில் ஒப்பந்ததாரர் முரளி இளநிலை உதவியளர் உதய குமாரிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பணத்தை வழங்கிய போது பணத்தை கணக்கர் சரவணனிடம் கொடுக்கும்மாறு உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒப்பந்ததாரர் முரளி கணக்கர் சரவணனிடம் ரூ.2 ஆயிரம் ரசாயம் தடவையாக நோட்டை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஆய்வாளர் குமரேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும் களவுமாக பிடித்தனர்.

இது தொடர்பாக உதயக்குமார், சரவணனை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒப்பந்ததாரரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது நகராட்சி இளநிலை உதவியாளர் மற்றும் கணக்கர் ஆகிய இருவரும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம்  சிக்கிய சம்பவம் கீழக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– பாலாஜி 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.