மலையாள சினிமாவில் எண்ட்ரியான லைகா! ‘L2- எம்புரான்’ டீஸர் ரிலீஸ்!
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘L-2 எம்புரான்’ படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான ‘லூசிஃபர்’ மற்றும் ‘ப்ரோ டாடி’க்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2019 ல் வெளியான ‘லூசிஃபர்’ படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, ‘L-2(E) எம்புரான்’ ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, ஜனவரி 26 அன்று கொச்சியில் விமரிசையாக நடந்தது. இதில்’மெகாஸ்டார்’ மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
சுபாஸ்கரனால் துவங்கப்பட்டு, ஜி.கே.எம். தமிழ்க் குமரனால் தலைமையேற்று வழிநடத்தப்படும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பெரிய பட்ஜெட் மற்றும் சிறந்த உள்ளடக்கம் சார்ந்த படங்களை வழங்குவதில், பெயர் பெற்ற ஒரு சிறந்த தயாரிப்பு நிறுவனம் . மலையாள திரையுலகில் அறிமுகமாகும் விதமாக, லைகா புரொடக்ஷன்ஸ், பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய் குமார் மற்றும் பைஜு சந்தோஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை: முரளி கோபி, இசை :தீபக் தேவ், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு, சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் பயஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு வடிவமைப்பு, ஆர்ட் டைரக்டர்: மோகன்தாஸ்.
L2E: எம்புரான் மார்ச் 27, 2025 அன்று மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது.
— மதுரை மாறன்.