தேவா சொன்ன கடைசி வார்த்தைகள் – ரஜினி !
இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு குறித்து இரங்கல் வீடியோவை பதிவிட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த, அந்த வீடியோவில் இசையமைப்பாளர் தேவா குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
தனது மூன்று படங்களான அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகியவற்றுக்கு இசையமைத்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்ததையும்; படையப்பா படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானை ஒப்பந்தம் செய்ய விரும்பியபோது, தேவா எந்தவிதமான மனக்கசப்பும் இன்றி மகிழ்ச்சியுடன் சம்மதித்ததையும் நெகிழ்வோடு பதிவு செய்கிறார்.
இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில்கூட தனக்கெனத் தனித்துவமான இசைப் பாணியை உருவாக்கி வெற்றிபெற அவரால் எப்படி முடிந்தது எப்படி என்பதையும் விளக்குகிறார்.
மேலும், சமீபத்தில் தேவா தனது இசை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளிலும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டதையும்; இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ விரும்புவதாகவும் தேவா தன்னோடு பகிர்ந்துகொண்ட தருணங்களை பதிவு செய்திருக்கிறார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.