வணிகவரித்துறையில் ஆட்குறைப்பு கிடையாது – அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

​தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், திருச்சியில் மாநிலத் தலைவர் லெட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி கோட்டத் தலைவர்  பொன்னுச்சாமி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கூட்டத்தில்  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசும் பொழுது எந்த துறை ஆனாலும் ஊழலற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என்பது முதலமைச்சர் விஜயின் நோக்கம். அரசு அலுவலகர்கள் மீது அரசியல் அழுத்தம் இருக்காது. வணிகவரித்துறையில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆட்குறைப்பு என்ற முயற்சியை  அரசு என்றும் கையில் எடுக்காது. இந்த தகவல் வெறும் வதந்தி. இந்த துறை அலுவலர்களுக்கு எதிரான எந்த முடிவையும் அரசு எடுக்காதது. உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடு க்கும் என்று பேசினார்.

கூட்டத்தில் அரசுக்குரிய வருவாய் வளர்ச்சியை முழுமையாக உறுதி செய்யும் வகையில், வணிகவரித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

​போர்க்கால அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். புதிய பணியிடங்களையும் உருவாக்க வேண்டும்  என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.