தோற்றது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மட்டுமல்ல ; மோடியின் மீதான நம்பிக்கையும் தான் !

0

தோற்றது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மட்டுமல்ல; மோடியின் மீதான நம்பிக்கையும் தான் ! 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதல் கலவரங்களால் பற்றி எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலப் பிரச்சனை குறித்து ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு ஒன்றியத் தலைமை அமைச்சர் மோடி பதில் அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி அவையைச் சுமுகமாக நடக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்தன.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஆளும் கட்சியான பாஜக தலைமை அமைச்சர் பதில் சொல்ல வரமாட்டார். உள்துறை அமைச்சர் பதில் சொல்வார். மணிப்பூர் குறித்துக் குறுகிய நேர விவாதம் மட்டுமே நடத்தப்படும். நீண்ட நேர விவாதம் நடத்தமுடியாது என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசவும், தலைமை அமைச்சர் பதில் சொல்ல வைக்கவும், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் சார்பில் “அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்” கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 8 மற்றும் 9ஆம் நாள்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

Rahul_Ganthi_1
Rahul_Ganthi_1

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

9ஆம் நாள் எதிர்க்கட்சிகளின் சார்பில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி,“நான் அதானியைப் பற்றி பேசமாட்டேன், இந்த அரசின் குறைபாடுகளைப் பற்றி பேசமாட்டேன். மணிப்பூர் பிரச்சனையை மட்டும் பேசுவேன். பாஜக பயம் கொள்ளவேண்டாம்” என்று அங்கதச் சுவையோடு தொடங்கினார். “கலவரம் நடந்து கொண்டிருக்கும்போது நான் மணிப்பூர் சென்றேன். பாதிக்கப்பட்ட இரு சமூக மக்களையும் சந்தித்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.

உள்துறை அமைச்சர் மணிப்பூர் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். சமாதானக் குழுக்களையும் அமைத்துள்ளார். தேசியப் பெண்கள் நல அமைப்பைச் சார்ந்த தலைவி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடங்கி 100 ஆகியும் தலைமை அமைச்சர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை. பாஜக ‘பாரத் மாதாகி ஜே’ என்று முழக்கமிடுகிறார்கள். மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாரதமாதவை கொலை செய்துவிட்டீர்கள்” என்று அரசை நோக்கிக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

Modi_
Modi_

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு இன்று (10.08.2023) மாலை 5.00 மணிக்குத் தலைமை அமைச்சர் மோடி பதில் அளிக்கத் தொடங்கி 133 நிமிடங்கள் உரையாற்றினார். தலைமை அமைச்சர் உரை, அரசின் சாதனைகளை வெளிப்படுத்துவதாக இருந்தன. காங்கிரஸ் கட்சியின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கனா, பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், திரிபுரா, தில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை என்பதை மக்கள் தெரிவித்துவிட்டார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது காங்கிரஸ் கட்சி மற்றும் நேருவின் கொள்கைகள்தான். நாங்கள் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறோம்.

2024ஆம் ஆண்டு வரலாற்றில் முதன்முறையாகப் 3ஆவது முறையாக பாஜக அரசு அமையும் என்றார். (நேரு 3 முறை தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சராக இருந்தார்) 2028ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது இந்திய முன்னேறிய நாடாக இருக்கும் என்ற தன் கனவை மோடி உரையில் வெளிப்படுத்தினார். மேலும் ஊழல் செய்வோர் இணைந்து இந்தியா என்னும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நாங்கள் ஊழலையும் வாரிசு அரசியலையும் கடந்த 9 ஆண்டுகளில் ஒழித்துவிட்டோம். இந்திரா காந்தியோடு திமுகவும் சேர்ந்துகொண்டு நம் நாட்டின் கச்சத்தீவை இலங்கைத் தாரை வார்த்துக் கொடுத்தது. இப்போது திமுக தலைவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று எனக்குக் கடிதம் எழுதுகிறார். (நெருக்கடிகால நிலையில் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கை கொடுத்தார். திமுக கடுமையாக எதிர்த்தது. பாஜகவின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தியும் கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் என்று பேசினார்.) அந்தக் காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி உறவு வைத்திருக்கிறது என்று திமுகவைக் கடுமையாக மோடி சாடினார்.

மணிப்பூர்
மணிப்பூர்

எதிர்க்கட்சிகள் தலைமை அமைச்சரின் உரையின்போது, மணிப்பூர்…. மணிப்பூர்…. மணிப்பூர்…. என்று முழக்கமிட்டுக் கொண்டே இருந்தார்கள். மோடி மணிப்பூர் பற்றி பேச முன்வரமாட்டார் என்பதை உணர்ந்து 129 நிமிடத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கடைசி 4 நிமிடங்கள் மட்டும் மணிப்பூர் பற்றி மோடி பேசினார்.“நாடும் இந்தியாவின் 140கோடி மக்களும் மணிப்பூரில் அமைதி நிலவ உறுதுணையாக இருப்போம். மணிப்பூர் கலவரத்திற்குக் காரணமானவர்கள் கைது செய்து தண்டிக்கப்படுவார்கள். மணிப்பூர் மக்களுக்கு என் இதயத்தில் இடம் இருக்கிறது. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்று கூறி விவாதத்திற்குப் பதில் அளித்து உரையை நிறைவு செய்தார்.

பின்னர்க் குரல் வாக்கெடுப்பின் மூலம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது என்பதைச் சபாநாயகர் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இதுவரை 30 நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மட்டும், மணிப்பூர் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்டது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

தலைமை அமைச்சர் மோடி 133 நிமிடப் பதிலுரையில் வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசினார். அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது. மாநிலத்தின் உள்ள புலம் பெயர்ந்துள்ள 10 ஆயிரம் குழந்தைகள் உட்படச் சுமார் 50ஆயிரம் பேர் எப்போது மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள்? கலவரம் தொடரா வண்ணம் எடுக்கப்பட இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி மோடி எதுவும் பேசவில்லை. தன் சாதனைகளையும் காங்கிரஸ், திமுக கட்சிகளைக் குறை கூறியும், இந்தியா கூட்டணி புதிய பெயிண்ட் அடிக்கப்பட்ட பழைய கார் என்று கேலிபேசினார். அதற்கேற்பத் தன் உடல்மொழியையும் அமைத்துக்கொண்டார்.

Modi_
Modi_

எதிர்க்கட்சிகளின் மீதான மோடியின் உரையில் தாக்குதல் நடத்தும்போது அரங்கம் அதிரப் பாஜக உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் மனக்காயங்களுக்கு மருந்திடவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இதன் மூலம் மோடி ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியும் என்று நம்பவும் இல்லை. மணிப்பூர் மக்கள் நம்பிக்கைகொள்ளும் வகையில் ஆறுதல் பெறும் வகையில் மோடியின் உரை அமைந்திருக்கவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் தோற்றது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மட்டுமல்ல, மோடியின் மீது இந்திய நாட்டு மக்களும் கொண்டிருந்த நம்பிக்கையும் என்பதுதான் சோகமான உண்மை.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.