மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் !
மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்று கொண்டார்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர் கடந்த 2005-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாவார்ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, 2009-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்எஸ்பிசிஐடி, எஸ்.பி., தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்களின் எஸ்.பி.யாகவும், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் துணை ஆணையராகவும், ஆளுநரின் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும், கேரளா மாநிலத்தில் ஐ.பி.பிரிவு எஸ்.பி.யாகவும் நரேந்திரன் நாயர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற நரேந்திரன் நாயர் சென்னை தலைமையிட டிஐஜி பணியாற்றிய பின்னர், கோவை சரக டிஐஜியாகவும் பணிபுரிந்து பின்பு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்து வந்தார்இந்த நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த செந்தில்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்
இந்த நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் இன்று பொறுப்பேற்று கொண்டார்