மாவீரன் போல –  பாடல் வெளியீட்டு விழா !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி – கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் கலைத்துறை வார்ப்புகளில் ஒருவரான பாடகர் ஆகாஷ் வரிகளில் உருவான  “மாவீரன் போல” என்ற புதிய பாடலின் வெளியீட்டு விழா அக்-03 அன்று திருச்சியில் நடைபெற்றது.

ஆகாஷ் வரிகளுக்கு ஆண்ட்ரவின் ஸ்டாரி இசையமைத்துள்ளார். பாடலை திரைப்படப் பின்னணி பாடகர் ஹரிச்சரன் பாடியுள்ளார். மேலும் E-Sharp The Band பாடகர் ஜெயபாரதி உள்ளிட்ட கலைஞர்களின் பங்களிப்புடன் இப்பாடல் உருவாகியுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கலைக்காவிரி பேராசிரியர் முனைவர் கி.சதீஸ்குமார் தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், சமூக ஆர்வலர் மோகன் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற விழாவில், திருச்சி மாவட்ட நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “மாவீரன் போல” பாடலை வெளியிட்டார்.

”இளையோர்கள் கலைத்துறையில் படைப்பாற்றலுடன் உருவாகி வருவது பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியது இவர்களை வரவேற்று வளர்த்தெடுத்தல் நமது கடமை” என்றார் சிவகுருநாதன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.