திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் –  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இந்திராகாந்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் பி. வெங்கட்ராமன் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சியினை மேற்கொள்ள இயலும், இது வேலை வாய்ப்பு மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அணு உலை விஞ்ஞானிகளுடன் கூட்டு ஆராய்ச்சியினை மேற்கொண்டு இணைவு பதிப்புகள் வெளியிடவும் இணைவு கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் நடத்தவும் இயலும்.

ஐசிகேர் விஞ்ஞானிகளின் அறிவாற்றலை புதிய பாடதிட்டங்களை வகுக்க பயன்படுத்த இயலும். ஆற்றல் சேமிப்பு மற்றும் பயன்பாட்டிற்கான கலவை பொருட்கள். நேனோ பொருட்கள் உருவாக்கம், டுடி பொருட்கள் உருவாக்கம், வேதியியல் உருவாக்கம் மற்றும் பகுப்பாய்வு, மரபியல் தாவர அமைப்பு மாற்றம், மருந்து விநியோக அமைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மருந்து தயாரித்தல் மற்றும் பிற துறைகளில் இணைவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இயலும்.

இவ்விழாவில் கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் ஐஜிகேர் அதிகாரிகள் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியர்கள் இருந்தனர்.

– ஆதன்

Leave A Reply

Your email address will not be published.