அங்குசம் பார்வையில் ‘மூத்தகுடி’ படம் எப்படி இருக்கு ! ..

0

அங்குசம் பார்வையில் ‘மூத்தகுடி’. 

தயாரிப்பு: பிரகாஷ் சந்திரா, கதை-வசனம்: எம்.சரக்குட்டி, டைரக்டர்: ரவிபார்கவன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, அன்விஷா, கே.ஆர்.விஜயா, ஆர்.சுந்தர்ராஜன், சிங்கம் புலி, ராஜ்கபூர், யார் கண்ணன். ஒளிப்பதிவு: கந்தா ரவிச்சந்திரன், இசை: ஜே.ஆர்.முருகானந்தம், எடிட்டிங்: வளர்பாண்டி. பிஆர்ஓ: மணவை புவன்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

மூத்தகுடி கிராமத்தில் கே.ஆர்.விஜயாவின் குடும்பம் தான் மூத்தகுடி. இந்த மூத்தகுடியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமையாக கருதுபவர்கள் அந்த கிராமத்துக்குடிகள். ஒரு நல்ல காரியத்திற்கு லாரியில் மூத்தகுடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போகும் போது, லாரி டிரைவரும் மூத்த குடியைச் சேர்ந்த ஒருவரும் சாராயம் குடித்து விட்டு லாரியை ஓட்டும் போது எதிரே வந்த லாரியுடன் மோதி தீப்பிடித்து பலர் எரிந்து சாம்பலாகின்றனர்.

மூத்தகுடி திரைப்படம்
மூத்தகுடி திரைப்படம்

- Advertisement -

4 bismi svs

இதனால் கோபமாகும் கே.ஆர்.விஜயா, இனிமேல் ஊருக்குள் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது, குடித்து விட்டு வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து அந்த கிராமத்திற்கு ஒயின் ஷாப் வருவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார் எழுத்தாளர் சரக்குட்டி( பேரு பொருத்தமா இருக்குல்ல).

அப்போது மீடியாக்களிடம் மேற்படி ஃப்ளாஷ் பேக்கை சொல்கிறார் சரக்குட்டி. அந்த ஃப்ளாஷ் பேக்கில் தான் ஆர்ட்டிஸ்ட் லிஸ்டில் நாம் எழுதியுள்ள அம்புட்டுப் பேரும் வருகிறார்கள், பாடாவதி மாடுலேஷனில் வசனம் பேசுகிறார்கள், போகிறார்கள். அதிலும் ராஜ் கபூர் வரும் சீன்களிலெல்லாம் உறுமுகிறார், கர்ஜிக்கிறார். கடைசியில் ஹீரோயின் கையால் குத்துப்பாட்டு சாகிறார். அட இதையெல்லாம் விட கொடுமை, தருண் கோபி நடிச்சிருக்காரு பாருங்க ஒரு நடிப்பு.

கொடுமையிலும் கொடுமை. இது நடிக்கவே தெரியாத ஹீரோயினுக்கே பிடிக்காம, க்ளைமாக்ஸ்ல ராஜ்கபூருடன் சேர்த்து தருண்கோபியையும் குளோஸ் பண்ணிட்டார். நல்ல கண்டெண்ட் தான். அதை கண்டமேனிக்கு படமாக எடுத்து சிதைத்திருக்கிறார் டைரக்டர்.

— மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.