திருச்செந்தூர் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் எம்பி கனிமொழி கருணாநிதி அவர்கள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராட சிரமமான சூழ்நிலை உள்ள நிலையில் (18/01/2025) சனிக்கிழமை, திருச்செந்தூர் கடற்கரை பகுதிக்கு நேரில் சென்று கடல் அரிப்பை தடுக்கவும், கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை மறு சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள்!
ஆய்வின்போது, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அனிதா இராதாகிருஷ்ணன், திரு.பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், மாவட்ட ஆட்சியர் திரு.இளம் பகவத், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திருமிகு.பிரம்மசக்தி மற்றும் பலர் உடனிருந்தனர்!
— மணிபாரதி.