இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி உதவிய ‘நாம் தமிழர்’ மகேஸ்வரி முருகேசன்

0

இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி உதவிய

நாம் தமிழர்மகேஸ்வரி முருகேசன்

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு இந்திய ஒன்றிய அரசும், தமிழக அரசும் அனுப்பிய நிதியோ, பொருள் உதவியோ முழுமையாக தமிழர்களுக்கு சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டை அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உணவு பொருட்களை அனுப்புவதற்கான  வழித்தடங்களை உருவாக்கிய சீமான், தமிழ்நாட்டிலும் அயலகத்திலும் வாழுகின்ற தமிழர்களுக்கு பொருள் வேண்டி நான்கு பக்கம் கொண்ட ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அவரின் அறிவிப்பை ஏற்று இலங்கை மக்களுக்கு  தங்களால் இயன்ற பொருள் உதவிகள் வழங்கியது போக வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் துண்டறிக்கை கொடுத்து பொருட்களை சேகரித்தார்கள்.

‘நாம் தமிழர்’ மகேஸ்வரி
‘நாம் தமிழர்’ மகேஸ்வரி

அந்த வகையில், பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுநாம் தமிழர்கட்சி வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர்களில் ஒருவரான மகேசுவரி முருகேசன் வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை சேகரித்தார். இரண்டே நாட்களில் ஆயிரம் கிலோ அரிசியை சேகரித்ததோடு, முதல் கட்டமாக அரிசி, பருப்பு, உளுந்து, கோதுமை மாவு, புளி, மிளகாய், ரொட்டி துண்டு, உப்பு, சர்க்கரை  உள்பட 4500 கிலோ உணவு பொருட்கள் என அனைத்தையும் உடனடியாக தலைமை அறிவித்த இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

கட்சியின் மாவட்ட பொருளாளர் முருகேசன், பெரம்பலூர் தொகுதி இணைச்செயலாளர் பரமேசுவரன், பொருளாளர் மணிகண்ட பிரபு, ஒன்றிய செயலாளர் வேலுசாமி, அருமடல் கிளை செயலாளர் முத்துகுமார், கையூட்டு ஊழல் ஒழிப்பு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் துரை உள்ளிட்டோர் ஈழத்தமிழ் உறவுகளுக்காக நிவாரண பொருட்கள் சேகரிப்பில் தனது அன்றாட பணிகளை விடுத்து மகேசுவரி முருகேசனுடன் இணைந்து தொடர்ந்து களப்பணியாற்றியுள்ளனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.