தேசியக் கல்லூரியில் கணினி வழி மருந்து வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின்  முதுகலை மற்றும் ஆராய்ச்சி தாவரவியல் துறை சார்பில் “கணினி வழி மருந்து வடிவமைப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான கணினி சார் கருவிகள்”  என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளராக தாவரவியல் துறைப் உதவிப் பேராசிரியர் முனைவர் மா. கோபெருஞ்சோழன்  செயல்பட்டார். அவர் மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு  குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதில் திருச்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சேர்ந்த 7 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி துணை முதல்வர் முனைவர்  சுந்தர் மற்றும் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் இ. நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பாரம்பரிய தாவரவியல் ஆராய்ச்சியுடன் நவீன கணினி தொழில்நுட்பத்தை இணைக்கும் இந்த முயற்சியை அவர்கள் பாராட்டினர்.

பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், இப்பயிற்சி தங்களது எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகத் தெரிவித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.