எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த நீர் மோர் பந்தல் !

0

சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, திராட்சை, முலாம்பழம், இளநீர், நுங்கு, வெள்ளரி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

முன்னதாக நிகழ்விடத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மேள தாளங்கள் முழங்க கும்ப மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

– சோழன்தேவ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.