நியோமேக்ஸ் : ஏலம் தொடர்பான நீதிமன்ற அறிவிப்புகள் முழுமையாக ஒரே இடத்தில் !

ஏல அறிவிப்பு தொடர்பான முழுமையான புரிதல்கள் இன்றியும், பல்வேறு சந்தேகங்கள் மற்றும்  குழப்பங்களுடனே அணுகிவருகிறார்கள்.

0

நியோமேக்ஸ் : ஏலம் தொடர்பான நீதிமன்ற அறிவிப்புகள் முழுமையாக ஒரே இடத்தில் !

நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில், நீண்ட இழுபறிகளுக்கு பிறகு முதற்கட்டமாக நியோமேக்ஸ் நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்னிலையில் நடைபெற்று வரும் (CRL.OP(MD) No. 15498/2024 and others ) பிணை ரத்து தொடர்பான வழக்கின் தொடர்ச்சியாக, இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன்படி, பட்டியலிடப்பட்டுள்ள 29 புராஜெக்டுகளில் உள்ள 10,158 பிளாட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஏல அறிவிப்பு, ஏலத்தில் இடம்பெற்றுள்ள சொத்துக்களின் விவரங்கள் மற்றும் புகார்தாரர்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசின் இணையதளத்தில் (www.tneow.tn.gov.in) வெளியாகியிருக்கிறது.

மின்னணு முறையில் நடைபெறும் ஏலத்தை, ஒன்றிய அரசின் நிறுவனமான MSTC நடத்துகிறது. இதற்கான பதிவுகள் தொடர்பான விவரங்களுக்கு MSTC (www.mstcecommerce.com) இணையதளத்தை அணுகலாம்.

நியோமேக்ஸ் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பலரும் இந்த ஏல அறிவிப்பு தொடர்பான முழுமையான புரிதல்கள் இன்றியும், பல்வேறு சந்தேகங்கள் மற்றும்  குழப்பங்களுடனே அணுகிவருகிறார்கள். சற்றே சிக்கலான நடைமுறைதான். இருப்பினும், கூடுமானவரையில் அங்குசம் தரப்பில் நியோமேக்ஸ் ஏலம் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கச்செய்ய வேண்டுமென்ற நோக்கில் இதுதொடர்பான தகவல்களை இங்கே ஒழுங்கமைத்திருக்கிறோம்.

வாட்ஸ்ஆப் சேனலில் இணைய
வாட்ஸ்ஆப் சேனலில் இணைய

கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் “கமெண்ட்” பகுதியில் கருத்துக்களை பதிவிடுங்கள். தொடர்ந்து தகவல்களை வழங்க எங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்கிறோம். அங்குசம் அறம் யூடியூப் சேனலில் நியோமேக்ஸ் வழக்கு தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. தொடர்ந்து தகவல்களை பெற, அங்குசம் அறம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். அங்குசம் செய்தி வாட்சப் குழுவிலும் இணைந்து கொள்ளலாம்.

அங்குசம் அறம் சேனலில் வெளியான வீடியோக்கள் :

முக்கிய தேதிகள் :

ஏல அறிவிப்பு வெளியான நாள் : 26.02.2026

செய்திதாள் விளம்பரம் வெளியான நாள் : 27.02.2026

MSTC இணையத்தில் பதிவு செய்யும் நடைமுறை துவங்கும் நாள் : 05.03.2026 முதல்

ஏலம் நடைபெறும் நாட்கள் : 17.03.2026 முதல் 14.05.2026 வரை (ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் ஏலம் நடைபெறாது)

மின்னணு ஏல நேரம் : காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில்

ஏலத்தில் இடம்பெற்றுள்ள சொத்துக்களின் ஆவணங்களை சரிபார்ப்பது மற்றும்  நேரில் கள ஆய்வு செய்வதற்கான நாட்கள் : 02.03.2026 முதல் 13.03.2026 வரையில்

MSTC வலைதளத்தில் பதிவு செய்வதற்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆலோசனை வசதிக்கான அவகாசம் : 09.03.2026 முதல் 11.03.2026 வரையில் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் MSTC அலுவலர்கள் வருகைபுரிவார்கள். அவர்களிடம் நேரடியாக சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அவர்களது உதவியுடன் MSTC வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

உதவி தொலைபேசி எண்கள் :

ஏல சொத்துக்கள் தொடர்பான ஆவணம் மற்றும் கள ஆய்வு உதவிக்கு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலர்களை தொடர்பு கொள்ள ;

9080381065 | 8778245559

மின்னஞ்சல் முகவரி : eowmadurai2@gmail.com

 

MSTC வலைதளத்தில் பதிவு செய்வது மற்றும் ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான சந்தேகங்களுக்கு MSTC அலுவலர்களை தொடர்பு கொள்ள :

9499054101 – 9499054102 – 9499054103 – 9499054104

இணையதள முகவரிகள் – இணைப்புகள் :

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு : www.tneow.tn.gov.in

 

ஏல அறிவிப்பு (தமிழில்) :

 

ஏல அறிவிப்பு (ஆங்கிலத்தில்) :

 

புகார்தாரர்களின் பட்டியல் :

1) ஏற்றுக்கொள்ளப்பட்ட புகார்தாரர்களின் முழுமையான பட்டியல் :

2) இருமுறை பதிவான புகார்தாரர்களின் முழுமையான பட்டியல் :

3) இன்னும் உறுதிபடுத்தாத புகார்தாரர்களின் முழுமையான பட்டியல் :

4) நீதிமன்றம் இறுதியாக கெடு விதித்த 08-10-2025 ஆம் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட புகார்கள் :

 

ஏல சொத்துக்களின் விவரங்கள் :

  1. போடி (தேனி)
  2. விருதுநகர் பிளாக் – 1 (விருதுநகர்)
  3. விருதுநகர் பிளாக் – 2A (விருதுநகர்)
  4. விருதுநகர் பிளாக் – G (விருதுநகர்)
  5. விருதுநகர் பிளாக் – H (விருதுநகர்)
  6. விருதுநகர் பிளாக் – I (விருதுநகர்)
  7. குற்றாலம் – தென்காசி (தென்காசி)
  8. திருச்சி – மொராய் சிட்டி (திருச்சி)
  9. வெஸ்டன்வேலி – பெரியகுளம் (தேனி)
  10. விருதுநகர் பிளாக் – 3 (விருதுநகர்)
  11. விருதுநகர் பிளாக் – E (விருதுநகர்)
  12. விருதுநகர் பிளாக் – F (விருதுநகர்)
  13. விருதுநகர் பிளாக் – L (விருதுநகர்)
  14. விருதுநகர் பிளாக் – J (விருதுநகர்)
  15. சங்கீத் கார்டன் – மதுரை (மதுரை)
  16. விருதுநகர் பிளாக் – 2B (விருதுநகர்)
  17. விருதுநகர் பிளாக் – D (விருதுநகர்)
  18. அமிர்தாசிட்டி – ராம்நாட் (ராமநாதபுரம்)
  19. அரசனூர் (சிவகங்கை)
  20. ஒக்கூர் (சிவகங்கை)
  21. தஞ்சாவூர் (தஞ்சாவூர்)
  22. கொடைரோடு (திண்டுக்கல்)
  23. சொர்ணபூமி – ஹில்டாப் – மதுரை (மதுரை )
  24. சொர்ணபூரி – டவுன் மதுரை (மதுரை)
  25. விருதுநகர் பிளாக் – B (விருதுநகர்)
  26. ஆழியூர் – திருவாரூர் (திருவாரூர்)
  27. விருதுநகர் பிளாக் – C (விருதுநகர்)
  28. கோவில்பட்டி – வில்லிசேரி (தூத்துக்குடி)
  29. நெல்லை துணைநகரம் – திருநெல்வேலி (திருநெல்வேலி)

 

இணைய இணைப்புகள் :

நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டவை – மாவட்ட வாரியாக

https://tneow.tn.gov.in/Properties.html

நீதிமன்ற உத்தரவையடுத்து மாவட்ட பதிவாளர்கள் தலைமையிலான மதிப்பீட்டு குழுவினர்  மாவட்ட வாரியாக மதிப்பிடப்பட்ட சொத்துக்கள்

https://tneow.tn.gov.in/Valuation_Report.html

புகார்தாரர்களின் நிலை அறிய :

https://app.tneow.org.in/tneow_web_app/login.aspx

சந்தா

MSTC வலைதளம் :

https://www.mstcecommerce.com/ 

www.mstcindia.co.in

MSTC வலைதளத்தில் நியோமேக்ஸ் ஏலத்துக்கான பகுதி :

https://mstcecommerce.com/auctionhome/nmgp/index.jsp

MSTC வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறை மற்றும் விதிமுறைகள் (ஆங்கிலத்தில்) :

https://mstcecommerce.com/auctionhome/Layouts/register.html

 

  • அங்குசம் புலனாய்வுக்குழு.

 

Leave A Reply

Your email address will not be published.