எங்க பஞ்சாயத்தை முடிக்க தனி ஜட்ஜ் தான் வேணும்… நீதிபதியின் அதிரடி கேள்வி…தயங்கிய நியோமேக்ஸ் அடுத்து செபி, ஈடி ரெய்டு…? வீடியோ !

நானே, பத்து இலட்சம் முதலீடு போட்டிருக்கேன். 8-வது மாசம், 2022 இல் மெச்சூரிட்டி ஆச்சு. மாசா மாசம் வரவேண்டிய வட்டிப் பாக்கியே ஒரு இலட்சத்துக்கு மேல வர வேண்டி இருக்கு.

0

எங்க பஞ்சாயத்தை முடிக்க தனி ஜட்ஜ் தான் வேணும்… நீதிபதியின் அதிரடி கேள்வி…தயங்கிய நியோமேக்ஸ் அடுத்து செபி, ஈடி ரெய்டு…?

தலைமறைவாக பதுங்கியிருக்கும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன், கமலக்கண்ணன், வீரசக்தி உள்ளிட்ட 10 பேரின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முன்ஜாமீன் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களின் சார்பில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தனியே ரிட் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆக-02 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனு ( (WP(MD) 18991/2023), நீதிபதி டி.நாகர்ஜூன் முன்பாக கடந்த ஆகஸ்ட் 7 அன்று விசாரணைக்கு வந்தது.

2 dhanalakshmi joseph

வீடியோ லிங்

 

- Advertisement -

- Advertisement -

“DTCPயால் அங்கீகரிக்கப்பட்ட 4 கோடியே 12,65,276 சதுர வீட்டு மனைகள் பத்திரப் பதிவுக்கு தயார் நிலையில் இருக்கின்றன. நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் நிலங்கள் ஏராளமாக உள்ளன. சிலர் நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக கூறி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதன்பேரில், நியோமேக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். எங்கள் மீது புகார் கொடுத்தவர்களுக்கு நிலத்தைப் பிரித்துக்கொடுத்து பிரச்சினையை முடித்துக்கொள்ள விரும்புகிறோம். மேலும், இதற்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.” என்ற கோரிக்கைகளுடன் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

”விசாரணைக்காக போலீசாரிடம் ஏன் சரணடையவில்லை? விசாரணை அதிகாரி களிடம் உரிய ஆவணங்களை ஒப்படைத்து இந்த கோரிக்கையை கேட்டிருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி டி.நாகர்ஜுன், இம்மனு குறித்து மாவட்ட குற்றவியல் போலீசார் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தர விட்டிருக்கிறார். ”காலணா பெறாத நிலத்தை கால் கோடிக்கு கொடுத்து கணக்க முடிக்க நினைக்கிறது, நியோ மேக்ஸ் நிறுவனம்.” என கடந்த அங்குசம் இதழில் விரிவான செய்தியாக வெளியிட்டிருந்தோம். நாம் சுட்டிகாட்டிய விசயத்தை உறுதிபடுத்தும் விதமாக நீதிமன்றத்தில், நியோமேக்ஸ் நிறுவனமே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறது.

நீதிபதி டி.நாகார்ஜுன்
நீதிபதி டி.நாகார்ஜுன்

இன்னும் ஒரு மாசம் போனால், தமிழ் நாடே நம்ம நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதுதான்னு சொன்னாலும் சொல்லிவிடுவார்கள் போல. தமிழகம் முழுவதும் இவர்கள் வாங்கிப்போட்டிருப்பதாக குறிப்பிடும் இடங்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கிடப்பவை. அதுவும், அந்தந்த பகுதி இயக்குநர்கள், அவர்களின் நம்பிக்கையான விசுவாசிகளின் பெயரில் பினாமி நிலமாக பதிவு செய்யப்பட்டிருப்பவை. இது இன்னும் எத்தகைய நடைமுறைச் சிக்கல்களை சந்திக்கப் போகிறதோ, தெரியவில்லை. நாங்கள் நீதி, நேர்மை, நாணயமாகத்தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறோம் என பேசுபவர்கள், தமிழகம் முழுவதும் இத்தனை பேரிடமிருந்து, இவ்வளவு ரூபாய் வசூலித்திருக்கிறோம்; வசூலித்த பணத்திலிருந்து இத்தனை இடங்களை வளைத்துப் போட்டிருக்கிறோம்; கைவசம் இத்தனை தொழில்கள் இருக்கின்றன; என்று ஆதாரப்பூர்வமான அடிப்படை விவரங் களைக்கூட தெரிவிக்க நியோமேக்ஸ் நிறுவனம் தயங்குவது ஏன்?

வீடியோ லிங்

வாங்கி போட்ட சொத்துக்களின் பட்டிய லை கூட, பிறகு பார்த்துக் கொள்ளலாம். தமிழகம் முழுவதுமுள்ள நியோமேக்ஸ் வாடிக்கை யாளர்களின் உண்மையான எண்ணிக்கையையும்; அவர்களிடமிருந்து வசூலித்த தொகை பற்றிய விவரத்தையாவது நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்க முன்வருமா? அவ்வாறு பகிரங்கமாக அறிவித்துவிட்டால், செபியின் கிடுக்கிப்பிடிக்கும், அமலாக்கத்துறையின் ரெய்டுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்பதுதானே பிரச்சினை?

”ஜூம் மீட் உரையாடல்” வழியே கசிந்த உண்மைகள்!

இந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதற் காகத்தான், அதன் இயக்குநர்கள் இன்னும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். தலைமறைவாக இருந்துகொண்டே, ஜூம் மீட்டிங்கில் தங்களது வணிக தொடர்புகளை, தகவல் பரிமாற்றங்களை தடையின்றி மேற் கொண்டு வருகின்றனர். ஒன்று போலீசார் கண்டு கொள்ளாமல் விட்டி ருக்க வேண்டும். அல்லது, போலீசை மிஞ்சும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கிடையே தகவல் தொடர்பை கொண்டிருக்க வேண்டும். ஜாமீன் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சாயங்காலம் 4 மணிக்கு இழவுக்கு போகப்போகிறார் என்ற தகவல், இவர்களுக்கு மதியம் 12 மணிக்கே தெரியவருகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதியை பார்த்து பேசியதாக சொல்கிறார்கள். ஐ.ஜி. ஆசியம்மாள் இடமாற்றம் பற்றி பேசுகிறார்கள். மந்திரிக்கும் பிரச்சினை கொடுக்கிறார்கள் என புலம்புகிறார்கள். ’பெரிய இடத்து மனிதர்களின்’ ஆதரவில் வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சித்து வருகிறார்கள் என்பது இவர்களின் ஜூம் மீட்டிங் உரையாடல்களிலிருந்து அம்பலமாகியிருக்கிறது. திமுகவைச் சேர்ந்த எம்.பி.யும் பிரபலமான வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோதான் நியோமேக்ஸ் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி இருக்கிறார் என்பதும்; நியோமேக்ஸ் உள்ளிட்டு, மோசடி வழக்குகளில் அதிரடி காட்டிய பொருளாதார குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆசியம்மாளின் இடமாற்றத்தையும் தற்செயலானதாக கருதுவதற்கு இட மில்லை.

வீடியோ லிங்

பதுங்கிய பெருந்தலைகள் சிக்கினார்…. மாரிச்சாமி!

நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில் அதன் ஸ்தாபகர்களுள் ஒருவரான பத்மநாபன் உள்ளிட்டு ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, 6-வது நபராக விருதுநகர் மருளுத்து மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறார்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.

பதில காணோமே சார்….

முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீசு எஸ்.பி. யாக பணியாற்றும் திருநாவுக்கரசு அவர்களின் சகோதரர், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவர் என்றும்; தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது சகோதரர் மற்றும் நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவான சில முன்னெடுப்புகளை அவர் செய்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அத்தகவலை உறுதிபடுத்திக்கொள்ளும் நோக்கில் எஸ்.பி. திருநாவுக்கரசு அவர்களை அங்குசம் சார்பில் தொடர்பு கொண்டோம்.

திருநாவுக்கரசு ஐபிஎஸ்
திருநாவுக்கரசு ஐபிஎஸ்
4 bismi svs

வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பி வைக்குமாறு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவர் கேட்டபடி, நமது தரப்பு கேள்விகளை வாய்ஸ் மெசேஜ் ஆக அவரது வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைத்திருந்தோம். இதழ் அச்சாகும் வரையில், அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

வீடியோ லிங்

அபாண்டமான குற்றச்சாட்டு

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றியவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னை அண்ணா நகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டவருமான பொன்ராஜ் வெள்ளைச்சாமி மறைமுகமாக நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் பேசினோம்.

பொன்ராஜ்
பொன்ராஜ்

“ஐந்து வருடத்திற்கு முன்பாக, நியோமேக்ஸ் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராக பங்கேற்றிருக்கிறேன். இது பொதுவானது. மற்றபடி, எனக்கும் நியோமேக்ஸ் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இந்த விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசுவது அபாண்டமான குற்றச்சாட்டு; தவறானது.” என்கிறார், பொன்ராஜ்.

மேலிட அழுத்தமும் அதிகாரிக்கு எகிறிய பி.பி.யும்!

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு ஐ.ஜி. ஆசியம்மாள் இருந்த பொழுது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்போடு சரி. வழக்கின் விவரம் குறித்து தெரிந்து கொள்ள பத்திரிகையாளர்கள் முயற்சித்தாலும், பட்டும்படாமல் பேசி விரட்டிவிடுகிறாராம் ஆண்டவனை அழைக்கும் பெயரை கொண்ட போலீசு அதிகாரி. சோர்ஸ்களிடம் வாயைக் கிளறினோம். சம்பந்தம் இல்லாமல் மீடியாவிடம் வாயைக் கொடுத்து விடக்கூடாதென்று கண்டிப்பான உத்தரவாம்.

யாரும் எதிர்பார்க்காத வகையிலும், சம்பந்தம் இல்லாத இடத்திலிருந்து எல்லாம் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்கு நெருக்கடிகள் வந்து கொண்டேயிருப்பதாக சொல்கிறார்கள். தொடக்கத்தில், வேகம் காட்டிய அந்த அதிகாரிகூட அழுத்தங்களை கண்டு சோர்ந்தே விட்டாராம். பாவம், நெஞ்சுவலியே வந்துவிட்டது என்கிறார்கள். டஜன் கணக்கில் மாத்திரைகளை விழுங்கியபடிதான் வேலை பார்க்கிறார் என்கிறார்கள்.

ஜோஸ் தங்கையா ஐபிஎஸ்
ஜோஸ் தங்கையா ஐபிஎஸ்

மேலிடத்து நெருக்கடிகள் ஒருபக்க மிருக்க, நியோமேக்ஸ் பத்மநாபனை போலீஸ் கஸ்டடியில் எடுத்தபோதே, தொழில் ரகசியங்களையெல்லாம் கக்கிவிட்டாராம். அவர் கக்கிய விசயங்களை பாலோ செய்தாலே போதும் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்கிறார்கள். ஆனால், வேலை செய்யத்தான் ஜூட்டான ஆட்கள் இல்லை என்கிறார்கள். பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் தென் மாவட்டங்களில் பணிபுரியும் 40 இன்ஸ்பெக்டர்களும் பெண்கள் தானாம். அலுவல் ரீதியான போலீசாரும் பாதிக்கு பாதி பெண்கள் தானாம். இதுவும் தலைவலிதான் என்கிறார்கள்.

ஆண் போலீசாக இருந்தால், நடுசாமமாக இருந்தாலும் ஆளை தூக்கிடுவோம். பெண் போலீசை வைத்துக்கொண்டு 6 மணிக்கு மேல் எந்த வேலையையும் திட்டமிட முடியவில்லை என புலம்புகிறார்களாம். இப்போதைக்கு ஒரே ஆறுதல், பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு புதிய எஸ்.பி.யாக வந்திருக்கும் ஜோஸ் தங்கையாவை சொல் கிறார்கள். இவர் ஏற்கெனவே, மதுரை தல்லாகுளத்தில் ஏ.சி.யாக இருந்த தண்ணி காட்டியவர் என்கிறார்கள். ஐ.ஜி. சத்தியபிரியாவும் ஸ்டிரிக்ட் ஆபிசர்தான் என்கிறார்கள்.

வீடியோ லிங்

 

பினாமி பெயரில் சொத்துக்கள்! சிங்கப்பூரில் கேடட் கம்யூனிட்டி!

”கோர்ட்ல கேசு நடக்குற வரைக்கும் நியோமேக்ஸ் உண்மையைச் சொல்லாது. பினாமி பேர்ல வாங்கிப்போட்டிருக்க நிலத்தோட தகவலை அவங்களா சொல்லப் போறதும் இல்லை. பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசால் கண்டுபிடிக்கவும் முடியாது. எங்களை மாதிரி அந்தந்த ஏரியாகாரங்களுக்கு மட்டும்தான் தெரியும். கோர்ட்டுக்கு போறது பெரிய விசயமில்லை. மீறி போனா போட்ட காசு கூட முழுசா கிடைக்கும்னு உத்தரவாதம் இல்லை. அதான், இத்தனை மாசம் வட்டி வாங்கிட்டீங்களே, இந்தா இதுதான் மிச்சம்னு டாகுமெண்ட்ல இருக்கிற தொகையை செட்டில் பண்ணி அனுப்பிடுவாங்க.

நானே, பத்து இலட்சம் முதலீடு போட்டிருக்கேன். 8-வது மாசம், 2022 இல் மெச்சூரிட்டி ஆச்சு. மாசா மாசம் வரவேண்டிய வட்டிப் பாக்கியே ஒரு இலட்சத்துக்கு மேல வர வேண்டி இருக்கு. இந்த வழக்கு எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே டைரக்டர் பாலசுப்ரமணியனை நேர்ல பார்த்து பேசிட்டு வந்தோம். மெச்சூரிட்டி ஆனதிலிருந்து திருப்பி கொடுக்கிற வரைக்கும் உண்டான காலத்துக்கு வட்டி சேர்த்து தரோம்னு சொல்லியிருக்காங்க. போலீசு கேசுனு போனா இதுல்லாம் கிடைக்குமா?

வீடியோ லிங்

பெயில் கிடைச்சி வெளிய வரட்டும். நாங்க உக்கார வச்சி சுமுகமா பேசி முடிச்சாத்தான் எங்களுக்கு இலாபம். எங்க மாவட்டத்துல மட்டும் எப்படியும் எனக்குத் தெரிந்து 500 பேருக்கு மேல முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த வழக்குலாம் வர்றதுக்கு முன்னாடியே, மெச்சூரிட்டி ஆகியும் 45 கோடி பக்கம் அவங்க திரும்ப கொடுக்கல. இவங்களுக்கு அப்புறம் கொடுத்துக்கலாம்னு, சிங்கப்பூர்ல கேடட் கம்யூனிட்டி கட்றதுக்காக பெரிய அளவுல இன்வெஸ்மென்ட் பண்ணியிருக்காங்க. அவங்க 420னுலாம் சொல்ல மாட்டேன். என்ன ஒண்ணு, அகல கால் வச்சிட்டாங்க. அவ்வளவுதான்.” என்கிறார், பெயர் – புகைப்படம் வெளியிட விரும்பாத தென் மாவட்டத்
தைச் சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்களுள் ஒருவர்.

– வே.தினகரன், ஷாகுல், படங்கள்: ஆனந்த்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.