“மக்களைச் சந்திக்க கார் கேட்டதில்லை” பேருந்துக்குக் காத்திருந்த எம்.எல்.ஏ !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

படத்திலிருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த தோழர் நன்மாறன்.

அவர் பேருந்துக்காகக் காத்திருக்கும்போது எடுத்த படம் இது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தோழர் அப்போது  மதுரை கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதுதான் இந்தக்கார்காலத்தில் நாம் நினைவில்கொள்ள வேண்டிய செய்தி.

தோழர் பேருந்துக்காக நிற்பதைப் பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரருகில் வந்து கேட்டார்,”சார் எங்க போகணும்னு சொல்லுங்க, நான் எறக்கி விடறேன்.”

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பரவால்ல தோழர், நீங்க போங்க, என்கிட்ட இருபது ரூபாதான் இருக்கு, நான் பஸ்லயே போய்க்கறேன்.. என்றார் எம்‌.எல்‌.ஏ.

ஆட்டோ ஓட்டுநர் வற்புறுத்தி அவரை அழைத்துச்சென்றார்.. அப்போதும்கூட தன்னிடமிருந்த இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டுத்தான் இறங்கிப்போனார் தோழர்.நன்மாறன்.

ஒரு கம்யூனிஸ்ட்டைவிட வேறெந்த எம்.எல்.ஏ‌வும் தொகுதிக்குள் சுற்றித்திரிய இயலாது.. ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் மக்களைச் சந்திக்க அரசாங்கத்திடம் கார் கேட்டதில்லை.

கவிதா பாரதி முகநூலில்…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.