மற்ற அமைச்சர்கள் தப்பாக எடுத்து கொள்ளக் கூடாது-முதல்வர் பேச்சு!

0

நேற்று செப்டம்பர் 11 சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,952 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர் சேகர் பாபுவின் செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள் கூறினார். மேலும் விழாவில் அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டிப் பேசினார். மேலும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு, மா சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது சேகர்பாபு புகழ்ந்து பேசுவதால் மற்றவர்கள் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டது விவாதமாக மாறி இருக்கிறது. மேலும் இந்த கருத்தின் மூலம் கட்சிக்குள் இருக்கக்கூடிய சிறிய கருத்து வேறுபாடுகளை முதலமைச்சர் பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர் உபிகள்.

மேலும் தேர்தல் வாக்குறுதியாக என்னென்ன அறிவிப்புகளை திமுக வெளியிட்டதோ, அது அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு திட்டம் வகுத்துக் கொண்டு இருப்பதாகவும், மாதம்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கண்காணிக்கப் போவதாகவும் இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என்றும் முதலமைச்சர் பேசினார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.