அங்குசம் பார்வையில் ‘பீட்சா—3’

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

அங்குசம் பார்வையில் ‘பீட்சா—3’

 

தயாரிப்பு: ‘திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்’ சி.வி.குமார். தமிழக ரிலீஸ்: வி ஸ்கொயர் எண்டெர்டெய்ன்மெண்ட். டைரக்‌ஷன்: மோகன் கோவிந்த். நடிகர்—நடிகைகள்: அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, அனுபமா குமார், அபி நக்‌ஷத்ரா, கெளரவ் நாராயணன், கவிதா பாரதி, வீர நாராயணன், காளிவெங்கட், கே.பி.ஒய்,யோகேஷ், வேலு பிரபாகரன். தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவு: பிரபுராகவ், இசை: அருண் ராஜ், எடிட்டிங்: இக்னேஷியஸ் அஸ்வின். பி.ஆர்.ஓ.நிகில் முருகன்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பேய்ப்படம், திகில்ப்படங்களுக்கே ஃபிக்சிங் செய்யப்பட்ட பெரிய பங்களாவில் நைட் எஃபெக்டில் தான் முதல் சீனே ஆரம்பிக்கிறது. கரண்ட் கட்டாகிறது. தனது குழந்தைக்கு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு  பேய்க்கதை சொல்ல ஆரம்பிக்கிறார் அப்பா. சொல்லிக் கொண்டிருக்கும் போதே “டொம் டொம்..டொம்…” என பேஸ்கட் பால் தரையில் மோதும் சத்தம். கட் பண்ணா…..

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

 

3

பேய் இருக்கா? இல்லையா? நம்பலமா? நம்பப்டாதா? என்ற கான்செப்டில் ஒரு பேய் ஓட்டும் சாமியார், ஒரு லைப்ரரியன், ஒரு பகுத்தறிவு சிந்தனையாளர், ஆவிகளுடன் பேசும் ‘நியூ ஆப்’பைக் கண்டுப் பிடித்திருக்கும் ஒரு இளம் பெண் ஆகியோரிடையே நியூஸ் சேனலில் விவாதம் நடக்கிறது.

மேலே சொன்ன இரண்டு சீனுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் ஆவி ஆப் இளம் பெண் தான் படத்தின் ஹீரோயின் பவித்ரா மாரிமுத்து. இவருக்கும் படத்திற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. ரிச் கிளாஸ் ரெஸ்ட்ராரண்ட் நடத்தும் அஸ்வின் காக்குமானுவைக் காதலிக்கிறார் பவித்ரா. இது அவரது அண்ணன் கெளரவ் நாராயணனுக்குப் பிடிக்கவில்லை.

4

அஸ்வின் நடத்தும் ரெஸ்ட்ராண்டில் ஹைகிளாஸ் டேஸ்ட் உள்ள ஒரு ஸ்வீட் திடீரென ஃப்ரிட்ஜுக்குள் இருக்கிறது. அதை தான் செய்யவில்லை அஸ்வின் தான் செய்திருப்பான் என்கிறார் சீஃப் செஃப் காளிவெங்கட். ஆனால் அஸ்வினும் அதை செய்யவில்லை. பின்னே யார் செய்தது? என்ற குழப்பம் ஓடிக் கொண்டிருக்கும் போதே,இரவு நேரத்தில்  உணவு டெலிவரிக்காக வீரநாராயணன் வீட்டுக்குப் போகிறார் அஸ்வின். அதே இரவு வீரநாராயணன் கொல்லப்படுகிறார். அப்புறம் ஒரு இரவில் பவித்ராவுக்கு கெளரவ் நாராயணன் பார்த்திருக்கும் மாப்பிள்ளையப் பார்க்கப் போகிறார் அஸ்வின். அதே இரவு மாப்பிள்ளையும் பலியாகிறார். ரெஸ்ட்டாரெண்டிலும் திகில் சம்பவங்கள் நடக்கிறது. கொலைகளுக்குக் காரணம் அஸ்வின் தான் என நம்புகிறார் கெளரவ்.

 

அந்தக் கொலைகள் ஏன் நடக்கின்றன? எனக் கேட்க அந்த லைப்ரரியனைச் சந்தித்துக் கேட்கிறார்கள் அஸ்வினும் பவித்ராவும். அதற்கான விடை இடைவேளைக்குப் பின்.

மித்ரா ஸ்வீட் ஸ்டால் என்ற பெயரில் கடை நடத்துகிறார் கணவனை இழந்த அனுபமா குமார். இவரது மகள் அபி நக்‌ஷத்ரா. எதிர்பாராத விபத்தில் அபிக்கு பின் மண்டையில் அடிபட்டு, பத்து நிமிடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் மறந்துவிடும் வியாதிக்கு. இதைப் பயன்படுத்தி அந்த சிறுமியை சின்னாபின்னமாக்குகிறார்கள், அவர்கள் வசிக்கும் ஃபிளாட்டின் செக்யூரிட்டி, செக்ரட்ரி(கவிதா பாரதி) கெளரவ் பார்த்த மாப்பிள்ளை. இந்தக் கொடூரத்தைப் பார்த்த தாய் அனுபமா குமாரையும் குளோஸ் பண்ணி, அதே ஸ்வீட் ஸ்டாலுக்குள் எரித்துவிடுகிறார்கள். குளோஸான அந்த மூவர் தான் இந்தக் கொடூரர்கள்.  அந்த ஸ்வீட் ஸ்டால் இருந்த இடத்தில் தான் அஸ்வின் ரெஸ்ட்டாரெண்ட் நடத்துகிறார்.

இப்ப புரிஞ்சிருக்குமே ‘பீட்சா-3’யில் பேய் கனெக்‌ஷன். இடைவேளை க்குப் பின் தான் கதையில் விறுவிறுப்பும் பேய் பழிவாங்கும் காராணமும் மிகச்சரியாக இருக்கு. அபிக்கு நடந்த விபத்திற்கு தானும் ஒரு காரணம் என எண்ணி வெடித்து அழுகிறார் அஸ்வின். இதற்காக லவ்வர் பவித்ரா மாரிமுத்துவின் உதவியுடன் பேயுடன் பேசி உண்மையைத் தெரிந்து கொள்வது, லிப்டில் வைத்தே செக்யூரிட்டியை சாகடிப்பது, கவிதா பாரதியைத் துரத்தி துரத்தி விரட்டியடிப்பது என அஸ்வின் காக்குமானு கவனம் ஈர்க்கிறார்.

வெறும் பேய், ஆவி, திகில், டமால், டிமால் சத்தம், என்றில்லாமல் டச்சிங்கான செண்டிமெண்டைக் கனெக்ட் பண்ணிய டைரக்டர் மோகன் கோவிந்தைப் பாராட்டலாம்.  இந்த செண்டிமெண்ட் திகிலுக்கு திகிலூட்டியிருக்கிறார் மியூசிக் டைரக்டர் அருண் ராஜ்.

இந்தப் படம் ரிலீசாகப் போகுதுன்னு கொஞ்சம் முன்னக்கூட்டியே மக்களுக்குத் தெரிந்திருந்தால், மக்களும் ‘பீட்சா—3’யைப் பார்க்க வரிசை கட்டி நின்றிருப்பார்கள்.

–மதுரைமாறன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.