எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறேன்!
எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறேன்!
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை குறித்தான வதந்திகளுக்கும், கட்சித் தொண்டர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குமிடையே, கேப்டனின் பங்கேற்போடு நடந்து முடிந்திருக்கிறது, தேமுதிகவின் பொதுக்குழுக்கூட்டம்.
பொருளாளர் பதவியிலிருந்து பொதுச்செயலாளராகியிருக்கிறார், பிரேமலதா விஜயகாந்த். “இந்த பதவி எனக்கு முள் கிரீடம் போன்றது. தேமுதிகவுக்கு எதிரி வெளியில் இல்லை. உள்ளேயே இருக்கிறார்கள். என்முதுகுக்கு பின்னால் யார் என்ன பேசுகிறீர்கள் என்றெல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறேன். கட்சி அலுவலகத்தில் யாரும் எப்பொழுதும் என்னை சந்திக்கலாம். கட்சி தொடர்பான எந்த விசயத்தையும் முகத்துக்கு நேராக பேசலாம்.
இனி அடிக்கடி நிர்வாகிகள் சந்திப்புகள் இருக்கும். கட்சிக்கென்று ஹைடெக் அலுவலகம் ஒன்றை கட்டவிருக்கிறோம். அதேபோல ஐ.டி.விங் தொடங்குவோம். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து எம்.பி. கணக்கை தொடங்குவோம். 2024 இலட்சியம். 2026 நிச்சயம்” என உருக்கமாகவும் அதேசமயம் ”தில்” ஆகவும் பல விசயங்களை பேசியிருக்கிறார், பிரேமலதா விஜயகாந்த்.
மகனுக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுப்பது என்றும் நிர்வாகிகளின் கடந்தகால செயல்பாடுகளிலிருந்து அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
-மித்ரன்