ஐசரி கணேஷ் தயாரித்தது தான் ஆச்சரியம் ! பிடி சார் சக்சஸ் மீட் சுவாரஸ்யம் !

நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார்.

0

“ஐசரி கணேஷ் தயாரித்தது தான் ஆச்சரியம்! — ‘பிடி சார்’ சக்சஸ் மீட் சுவாரஸ்யம்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த  மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’.  ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களால் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில்,  படக்குழுவினர் அனைத்து வகை மீடியாக்களையும்  சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

- Advertisement -

ஆர்ட் டைரக்டர் அமரன் பேசும் போது,

“இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு என் முதல் நன்றி. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி. நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் படம் தான் இது. இப்படத்தைப் பாராட்டி வரவேற்ற அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்

“இந்தப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தப்பட வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த ஹிப்ஹாப் ஆதிக்கும் இயக்குநருக்கும் நன்றி. இந்த படத்தைத் தயாரித்த டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி”

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசும் போது,

4 bismi svs

“ஆதி பிரதருக்கு நன்றி. நான் யோசித்ததை ஏற்று, அதைக் கதையாகக் கொண்டு சேர்த்தது அவர் தான். அதே போல் நான் கேட்டதையெல்லாம் தந்து, இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு சேர்த்த ஐசரி சாருக்கு பெரிய நன்றி. மேலும் இப்படத்தில் உழைத்த என் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசு சார் இப்படத்தில் தந்த நடிப்பு, படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. முனீஷ்காந்த் மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தார். இரண்டாம் பாதி கோர்ட் சீன்கள் டிராமாவாக ஆகிவிடக்கூடாது என்பதால் ஜட்ஜாக பாக்யராஜ் அவர்களை  அணுகினேன்.அவர் வந்த பிறகு இந்தப்படம் இன்னும் சிறப்பாக அமைந்தது. நிறையப்பேர் படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது இப்படம் நல்ல தெளிவைத் தந்துள்ளது என்று கூறுகிறார்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி”. என்றார்.

நடிகர் முனீஷ் காந்த்,

“தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோவுக்கு நன்றி.  படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி. என் கதாபாத்திரத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி”.

நடிகர் இளவரசு, “சினிமாவில் சில நேரம் நல்ல விதைகள் விழும். அந்த வகையில் டைரக்டர் கார்த்திக் மிகச்சிறப்பான இயக்குநர். காலேஜ் சேர்மனை வில்லனாகக் காட்டும் கதை என நினைக்காமல், கல்லூரி நடத்தும் ஐசரி கணேஷ் சார்  இப்படத்தைத் தயாரித்ததற்கு என் நன்றி.என் கதாபாத்திரத்தை விமர்சனத்தில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது,”நல்ல கதையைத் தயாரிப்பாளரிடம் எடுத்துச் சென்று, அந்த இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்த ஹிப் ஹாப் தமிழா ஆதிக்குத் தான் முதலில் நன்றி சொல்லணும்.ஐசரி இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்ததற்கு நன்றி. கார்த்திக் வேணுகோபால் நான் பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நல்ல கதையைச் சிறப்பான திரைக்கதையில் தந்துள்ளார் வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ,

“இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பல்லாம் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவதே கடினமாக இருக்கிறது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா மாறிவிட்டது. அதையெல்லாம் தாண்டி ‘P T சார்’  நன்றாகப் போகிறது. வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும்.அதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. அவர் சிறந்த இயக்குநராக வருவார். அவரது அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன். புது இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுங்கள், நல்ல படமெடுங்கள். ஹிப்ஹாப் ஆதி தான் இந்தப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். அவர் இசையும் இதில் நன்றாக இருந்தது. பாக்யராஜ் சார் க்ளைமாக்ஸில் கலக்கிவிட்டார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்

ஹீரோ & இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும் போது,

‘ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்ததற்காக என் நன்றி. இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின் படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன். ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு பெரிய நன்றி.தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தப்படத்தை நம்பி வந்த பெரிய பெரிய ஜாம்பவான்கள் இப்படத்திற்கு பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது அனைவருக்கும் நன்றி”.

மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.