அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘பியார் பிரேமா காதல் ‘ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன் இப்போது கதாநாயகனாகவும் அறிமுகமாகும் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. வரும் 21- ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் முழு நீளத்திரைப்படம். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக டைரக்டர் வெற்றிமாறன் கலந்து கொண்டுள்ளார் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசியவர்கள்……

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

இயக்குநர் வெற்றி மாறன் 

“சில நிமிட டிரெய்லரிலேயே நம்மை நிறைய சிரிக்க வைக்கும் விஷயங்கள் இருந்தது. நான் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவன் என்னையே ஸ்டார் படத்தில் இரண்டு ஷாட் தான் என்று கூறி நடிக்க வைத்தவர் இளன். அதில் அவர் மீது கோபம் தான்… இப்போது அவரே நடிகராகி விட்டார், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

vetrimaran
வெற்றி மாறன்

ராதிகா சரத்குமார்

“ எனக்கு  நல்லதொரு பிறந்தநாள் பரிசாக இப்படம் அமைந்திருப்பதால்  மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு காதல், திருமணம், வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. அவர்களுடைய எண்ணங்களை நாங்கள் எப்படி புரிந்துகொள்கிறோம், அதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம், அந்த மாற்றங்களை எப்படி கையாள் கிறோம் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் பல விஷயங்களை மிகவும் நேர்மையாகக் கையாண்டிருக்கிறோம். அதனால் படம் சிறப்பாக வந்திருக்கிறது”.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

நடிகர் இளங்கோ குமரவேல்

“இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ‘நமக்கும் இதுபோல ஒரு மாமனார் கிடைக்க வேண்டும்’ என்று எல்லோரும் எதிர்பார்க்கும் அளவுக்கு, மாமனார் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக அமைத்திருக்கிறோம். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் என்று நம்புகிறேன்”.

நடிகர் செந்தில்

“நம்முடைய பாக்யராஜ் சார்  போல திரைக்கதையிலும் இயக்கத்திலும் கலக்கியிருக்கிறார் இளன். அவரைப் பார்க்கும்போது எனக்கு இன்னொரு பாக்யராஜ் சார் மாதிரி தோன்றியது”

யோகிபாபு

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“ஸ்டார்’  படத்தில் இருந்தே, நாம கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம்’ என்று இளன் என்னிடம் கூறியிருந்தார். அந்த வார்த்தையை இப்போது நிறைவேற்றி, இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு மிகவும் நன்றி.

அடுத்து நாங்கள் இணைந்து செய்யப்போகும் இன்னொரு படம் இருக்கிறது. அதில் நீங்கள் ரசிக்கும் வாட்ஸ்அப், யூடியூப் மேட்டர்கள்  இருக்கு”.

ஹீரோயின் சான்வீ மேக்னா

“எனக்கும் இளனுக்கும் முக்கியமான உணர்வுப்பூர்வமான காட்சி இருந்தது. அந்தக் காட்சிக்கு முன்பு அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். நான் அவரிடம், ‘ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் நடிகராக என்னுடைய முகத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், அடுத்ததாக என்ன காட்சியைப் படமாக்க வேண்டும் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்றார்.

அதன் பிறகு அவர் ஒருபோதும் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. ஆனால், படம் முழுவதும் அவருடைய செயல்பாட்டைக் கவனித்தபோது, இயக்குநர் நிலையிலிருந்து நடிகர் நிலைக்கும், நடிகர் நிலையிலிருந்து மீண்டும் இயக்குநர் நிலைக்கும் அவரால் மிக எளிதாக மாற முடிந்ததைப் பார்த்தேன்”.

ஹீரோ & இயக்குநர் இளன்

“எனக்கு மிகவும் முக்கியமான படம். இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் ரசிக்கும்படி கதை சொல்லியிருக்கேன். இதற்கு மேல்

படத்தைப் பற்றி அதிகமாக சொல்ல விரும்பவில்லை.  படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையும், சம்பவங்களையும் தங்களுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறோம்”.

யுவன் சங்கர் ராஜா

“‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம்.

இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்களுக்கு ரசிகர்களிடமிருந்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் மிகவும் பாசிட்டிவாக இருக்கின்றன. நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் காட்டும் அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்”.

சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 —   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.