பாஜக – RSS மோதலின் உச்சம் – RSS நூற்றாண்டு விழா 2024 !
பாஜக – RSS மோதல் வெடித்தது – மோடி பதவி விலகுவாரா ? நீக்கப்படுவாரா? பரபரப்பு தகவல்கள் – ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசியத் தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ஆம் நாள் விஜயதசமி அன்று நிறுவியவர்கள் கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவர்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் இந்துக்களை ஒன்றிணைப்பது. இந்தியாவை ஒரு நாடாகக் கட்டமைப்பது. இந்தியா இந்து நாடு என்ற அறிவிப்பது. மதச் சிறுபான்மையினரான கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை இந்துக்களிடம் விதைத்துக்கொண்டிருப்பது. 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலை பெற்றபோது தற்போதைய கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடு சேர்க்கப்பட்டது.
காரணம் அங்கே இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால். மேற்கு வங்கம் மற்றுக் கிழக்கு வங்க எல்லைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலவரங்களைத் தூண்டி, கிழக்கு வங்க எல்லையில் வாழ்ந்து வந்த இஸ்லாமியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் கொல்லப்பட்டார்கள். மேற்கு வங்க எல்லையிலும் இந்து அமைப்பினர் சிலரும் கொல்லப்பட்டனர்.
அந்தச் சமயம் இந்தியாவின் விடுதலை விழாவில் காந்தியடிகள் பங்கேற்காமல் இஸ்லாமியர்கள் பெருமளவு கொல்லப்பட்ட நவ்காளி (நவகாளி) என்னும் இடத்தை நோக்கிப் பாதயாத்திரை மேற்கொண்டு, இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடம் அமைதியை ஏற்படுத்தினார்.

பின்னர்க் காந்தியடிகள் பேசும்போது,“இந்தியா விடுதலை பெற்றால் இராமராஜ்யம் அமையவேண்டும் என்ற விரும்பினேன். இஸ்லாமியர்களைக் கொன்று இராமராஜ்யம் அமையவேண்டுமா? என்ற சிந்தனை எனக்குள் முதன்முறையாக எழுகின்றது” என்று காந்தியடிகள் முதல்முறையாக இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் காந்தியின் இஸ்லாமிய ஆதரவு நிலைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்த நாத்துராம் கோட்சே என்பவர் ஆர்கனைசர் என்ற RSS இதழில் “காந்தி இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமைப்படுத்துகின்றார். இது என் பிணத்தின்மீதுதான் நடக்கும்” என்று காந்தியடிகளின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, 1949ஆம் ஆண்டு காந்தியை அதே நாத்துராம் கோட்சே என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார் என்பது இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.

RSS அமைப்புக்குத் தேர்தல்கள் நடைபெறுவதில்லை. தற்போதைய தலைவர் எதிர்காலத் தலைவரைத் தேர்வு செய்வார். 20 பேர் கொண்ட பொதுக்குழு அமைக்கப்படும். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். இதில் இந்துக்களாக இருப்பவர்கள் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை போன்றவை வழங்கப்படாது.
உறுப்பினர்கள் ஏதாவது தீவிரவாதச் செயலில் ஈடுபட்டால் அவர் RSSஇல் இல்லை என்றும் அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை என்று கூறிவிடுவார்கள். இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்பதற்காக RSS 82 துணை அமைப்புகளை இந்தியா முழுவதும் உலக நாடுகளிலும் அமைத்துள்ளது. அதன் அரசியல் அமைப்புதான் பாரதிய ஜனதா கட்சி. அவற்றில் சில அமைப்புகளின் பெயர்கள் பின்வருமாறு
சங்கப் பரிவாரின் உறுப்பு அமைப்புகள்:
பாரதிய ஜனதா கட்சி
இந்து சுயம்சேவாக் சங்கம்
விசுவ இந்து பரிசத்
பஜ்ரங் தள்
இந்து முன்னணி
துர்கா வாகினி
ராஷ்டிரியச் சேவிக்காச் சமிதி
அகிலப் பாரத வித்யார்த்தி பரிசத்
இந்து இளைஞர் சேனை
இந்து மக்கள் கட்சி
பாரதிய மஸ்தூர் சங்கம்
ராம ஜென்மபூமி அறக்கட்டளை
பாலகோகுலம்
சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
சேவா பாரதி
பாரதியக் கிசான் சங்கம்
வித்யா பாரதி
இந்து விவேகக் கேந்திரம்
பாரதிய ஆய்வு மையம்
வனவாசி கல்யாண் ஆசிரமம்
ராஷ்டிரியச் சீக்கியர் இயக்கம்
முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்
சபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்
சமசுகிருதப் பாரதி
ஏகலைவன் கல்வி அறக்கட்டளை
விவேகானந்தக் கேந்திரம்
2002 குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு விவகாரத்தில் மாநிலத்தில் கலவரம் தொடங்கியது. அதில் பல இஸ்லாமியர்களில் பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் அரங்கேறியபோது மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் தற்போதைய தலைமை அமைச்சர் மோடி. படுகொலைகள் செய்தவர்களை நீதியின்பிடியிலிருந்து காப்பாற்றி மோடி தன்னை இந்துக்களின் பாதுகாவலன் என்ற பட்டத்தைப் பெற்றார். 1999-2004ஆம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் நடைபெற்ற 2004,2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது.

குஜராத் மாநிலத்தில் அசைக்கமுடியாத முதல்வராக மோடியை 2014ஆம் ஆண்டு தேர்தலில் RSS பிரதமர் வேட்பாளர் என்று அறிமுகம் செய்து ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து 2019ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜ 303 இடங்களைப் பெற்றது கூட்டணிக் கட்சிகள் சுமார் 70 இடங்களில் வெற்றிபெற்றன. இதனால் அரசியல்சாசனத்தைத் திருத்தும் 3இல் 2 பங்கு பெரும்பான்மையான 362 இடங்களைப் பெற்றது. இதை வைத்துக்கொண்டு, காஷ்மீர் மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் தகுதியை வழங்கும் 370ஆவது பிரிவு அரசியல் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டது. இதுபோன்ற RSS அமைப்பின் கொள்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றி வந்தது.
இந்தியா ஒரே நாடு, ஒரே தேர்தல், இந்துத்துவத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை போன்ற அடிப்படை மாற்றங்களைக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் செய்வதற்குப் பாஜக கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 362க்கு மேல் இருக்கவேண்டும் என்பதால்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 370 இடங்களைப் பெறும். கூட்டணி கட்சிகள் 30 இடங்களைப் பெற்று 400 இடங்களைப் பெறுவோம் என்ற மோடியின் முழக்கம் இந்தப் புள்ளியிலிருந்துதான் தோன்றியது.
RSSஇன் நோக்கங்களைச் சரியாக நிறைவேற்றிவரும் மோடியின் தலைமையிலான பாஜகவுக்கும் RSSக்கும் கடந்து ஓராண்டு காலமாக மோதல் நிலை தொடர்ந்து வருகின்றது. காரணம் 2024ஆம் ஆண்டு தேர்தலில் RSSஇன் கொள்கைகள் முன்னிறுத்தப்படாமல் தனிமனித மோடி முன்னிறுத்தப்படுவது, மோடியின் வாக்குறுதியை ஏற்று வாக்களியுங்கள் என்ற முழக்கம், நான் கடவுளின் அவதாரம் என்று மோடி கூறியது இதை RSS இரசிக்கவில்லை.

ஒரு கூட்டத்தில் RSS பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தது. அதில் பங்கேற்ற நிதின் கட்காரி,“RSS எங்களை வழிநடத்தியதுபோதும், பாஜக தனித்துவத்தோடு மோடியின் தலைமையில் செயல்படுவோம்” என்று கூறியதுதான் மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. மோடியின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம், தேர்தலை ஒரு போர் போல நடத்துவது, இடஒதுக்கீட்டை மறுப்பது என்ற மோடியின் கருத்திலிருந்து RSS எதிர்நிலை கொண்டிருந்தது. “தேர்தல் முடிவுகளின்படி பாஜக வெற்றிபெற்றால் மோடியைத் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க RSS முடிவு செய்திருந்தது” என்ற தகவலைப் பத்திரிக்கையாளர் சபீர் ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறும்போது“ 2024 தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் பெரும்பான்மை கிடைத்தது. தன்னை மாற்றும் முயற்சியில் RSS அமைப்பு உள்ளது என்பதை நன்கு உணர்ந்த மோடி, பாஜக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் கூட்டத்தைக்கூட்டி குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படாமல், தேசிய ஜனநாயக் கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டி, அதில் குழுத் தலைவராக மோடி தன்னைத் தேர்வு செய்துகொண்டார்.

இதனால் பாஜக கட்சி மீது RSSஇன் தலையீட்டைத் தந்திரமாகத் தவிர்த்துக்கொண்டார். RSS தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகள், அறிவுரைகள் எதுவும் பெறாமல் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமைகோரி, தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதை RSS இரசிக்கவில்லை. மாறாக மோடியின் மீது கடும்கோபம் கொண்டுள்ளது. காரணம் தனிமனித வழிபாட்டில் பாஜக தேர்தலைச் சந்தித்துப் பெரும்பான்மையை இழந்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை நடத்தமுடியும். RSSஇன் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசியல் சாசனத்தைத் திருத்த முடியாத நிலை ஏற்பட மோடியே காரணம் என்று RSS கோபத்தில் உள்ளது. RSS அமைப்பின் நூற்றாண்டு விழா 2024 செப்டம்பர் 27ஆம் நாள் தொடங்க உள்ளது. 2025 செப்டம்பர் 27ஆம் நாள் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்தியா ஒரு நாடு, இந்து நாடு என்று அரசியல் சாசனத்தைத் திருத்தி அறிவிக்க முடியாத நிலை மோடியால்தான் ஏற்பட்டது என்ற சினத்தில் RSS உள்ளது. இதன் தொடர்பாகத்தான் பாஜக – RSS மோதல் தற்போது நடைபெற்று வருகின்றது” என்று விவரித்துள்ளார்.

பாஜக – RSS மோதல் தொடர்ந்தால் மோடி தலைமை அமைச்சர் பதவியில் இருக்கமாட்டார். இப்போது மோடி பதவி ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம் மூன்று முறை இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்து நேருவின் சாதனையைச் சமன் செய்யவே என்பதுதான் முக்கியக் காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மோதல் போக்கில் சமரசம் ஏற்படவில்லை என்றால் மோடி எதிர்வரும் ஆகஸ்ட்டு 15ஆம் நாள் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்துவிட்டுப் பதவி விலகுவார் என்று டெல்லி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாஜக – RSS மோதல் முடிவுக்கு வருமா? தொடருமா? நிஜமா – நடிப்பா ? மோடி தலைமை அமைச்சர் பதவியில் நிலைப்பாரா? புதிய தலைமை அமைச்சரை RSS தேர்வு செய்யுமா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை விரைவில் தெரிந்துவிடும்
-ஆதவன்