சைவ சித்தாந்த பெருமன்றத்தின் 120ஆம் ஆண்டு விழா மாநாடு !
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் சைவ நெறியுடன் தமிழை வளர்ப்பதில் முதன்மை நோக்கம் கொண்டவர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் பல. அவற்றில், சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பை நிறுவி, அதன் வழியாக ஆரியத்திற்கு எதிரான தமிழ் மெய்யியலை முன்னெடுத்தவர். அதுவே சைவ சித்தாந்த பெருமன்றம் எனத் தொடர்ந்து இயங்கி, இப்போது 120ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

தந்தை பெரியாரின் குடி அரசு இதழின் அலுவலகத்தை ஈரோட்டில் தொடங்கி வைத்து, “சமூக கேடுகளுடன் சமயத்தில் உள்ள கேடுகளையும் அகற்றிட இந்த ஏடு தொண்டாற்ற வேண்டும்” என்ற வாழ்த்தியவர் ஞானியார் அடிகள்.
அவர் தொடங்கிய சைவ சித்தாந்த பெருமன்றத்தின் விழாவில் பங்கேற்று உரையாற்ற மீண்டும் ஒரு நல்வாய்ப்பு அமைந்துள்ளது.