அங்குசம் பார்வையில் ‘சிறுவன் சாமுவேல்’

0

தயாரிப்பு: கண்ட்ரிசைடு பிலிம்ஸ். டைரக்‌ஷன்: சாது பர்லிங்டன். நடிகர்-நடிகைகளாக திரையில் தோன்றிய நிஜ மனிதர்கள். சிறுவர்களாக அஜிதன் தவசிமுத்து, கே.ஜி.விஷ்ணு, மற்றும் பல சிறுவர்கள். எஸ்.செல்லப்பன், எஸ்.பி.அபர்ணா ஜெபா, மெர்சின், ஜெனிஸ். இவர்கள் தவிர கன்னியாகுமரி மண்ணின் மைந்தர்கள் பலர். ஒளிப்பதிவு: வி.சிவானந்த் காந்தி, இசை: சாம் எட்வின் மனோகர்& ஜே.ஸ்டான்லி ஜான். சவுண்ட் டிசைனர்: ஆர்.நரசிம்ம மூர்த்தி.

https://businesstrichy.com/the-royal-mahal/

கிரிக்கெட் மீதும் கிரிக்கெட் மட்டையின் மீது பெரும் ஆசை கொண்டவன் சிறுவன் சாமுவேல். அந்த ஊரின் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறான். இதற்காக தனது நண்பனின் துணையுடன் ஒரு மரக்கட்டையில் கிரிக்கெட் மட்டை போல செய்கிறான். அந்த ஊரில் இருக்கும் கொஞ்சம் பணக்கார வீட்டுப் பையன் கொண்டு வரும் விலை உயர்ந்த கிரிக்கெட் மட்டையைப் பார்த்ததும் அதே போல் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சிறுகசிறுக காசு சேர்க்கிறான். சாமுவேலின் ஆசை நிறைவேறியதா என்பதை க்ளைமாக்சில் உள்ளத்தைத் தொடும்விதமாக, நேர்த்தியாக சொல்லியிருப்பது தான் இந்த ’சிறுவன் சாமுவேல்’.

படம் மொத்தமே ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது. அந்த ஒன்றரை மணி நேரமும் நமது பார்வையும் சிந்தனையும் வேறெதிலும் திசைதிரும்பிவிடாமல் திரையிலேயே ஒன்ற வைத்துவிடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் டைரக்டர் சாது பர்லிங்டன். படத்தில் நடித்த யாருமே தொழில்முறை நடிகர்—நடிகைகள் இல்லை. முழுக்க முழுக்க கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள இயற்கையின் பரிபூரண வரம் பெற்ற அழகிய கிராமத்து மண்ணில் வாழ்பவர்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்கில், அந்த மனிதர்களின் உடல் மொழியை அப்படியே ‘ரா’வாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர். “ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன்” என்று சொல்லியிருப்பாரா என்பதுகூட சந்தேகம் தான். ஏன்னா இதில் வரும் மாந்தர்கள் யாவரும் கேமராவைப் பார்த்துப் பேசவேயில்லை. அந்தளவுக்கு டைரக்டருக்கு இணையாக பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

படத்தின் வசனத்தை நேரடியாக ஒலிப்பதிவு செய்திருப்பார்கள் போல. அதிலும் கேரள மாநில எல்லையையொட்டிய  குமரி மாவட்டத்தின் பேச்சு வழக்கு என்பதால் பல ஒலியின் அளவு குறைவாகவும் புரிந்து கொள்வதற்கு கடினமாகவும் உள்ளது. அதுதான் குறையாகவும் தெரிகிறது.

விருது வாங்குறதுக்குன்னே எடுத்த சில படங்களைப் பார்த்தால், எதுக்கு எடுத்தாய்ங்க, ஏன் எடுத்தாய்ங்க, இந்த மாதிரி எடுத்தாத்தான் விருது கொடுப்பாய்ங்களோ?ன்னு நமக்குத் தோணும். ஆனால் இந்த ‘சிறுவன் சாமுவேல்’ அந்த லிஸ்டில் வராத ’பெஸ்ட்’ சினிமா என்று சொல்லலாம்.

சிறந்த சினிமா எடுப்பது சிறந்த காரியமல்ல, அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தான் ஆகச்சிறந்த காரியம். இந்த காரியத்தை படக்குழுவினர் முன்கூட்டியே கச்சிதமாகச் செய்திருந்தால், வெகுஜன மக்களிடம்  சபாஷ் வாங்கியிருப்பான் இந்த ‘சிறுவன் சாமுவேல்’.

இருந்தாலும் தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் சாமுவேல் உட்பட அனைத்து மாந்தர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

–மதுரைமாறன்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.