வெற்றிகள் உழைப்பினால் மட்டும் வருவதில்லை. சில சேர்க்கைகளால் தான் சாத்தியமாகிறது.

தள்ளே...புலியாணு இவன்..அதும் வெறும் புலியல்ல...கழுதப்புலி !

0

வெற்றிகள் உழைப்பினால் மட்டும் வருவதில்லை. சில சேர்க்கைகளால் தான் சாத்தியமாகிறது.  மம்முட்டிக்கு ‘கைரளி’ என்கிற ஒரு சேனல் கேரளத்தில் இருக்கிறது. அதில் ‘ஜெக புக’ என்கிற ஒரு மிமிக்ரி ரொம்ப பாப்புலர் அப்போது. அதற்கு காரணம் அதில் நிகழ்ச்சி செய்பவர் பேசும் திருவனந்தபுரம் ஸ்லாங். அதற்காகவே மக்கள் அதை ரசித்தார்கள். அதை நடத்துபவர் பெயர் சுராஜ்.

ஒரு நாள் சுராஜ் நிகழ்ச்சி தயார் செய்து கொண்டிருந்த போது சேனலின் ஆள் வந்து ‘”சிஇஒ’ ரூமில் உங்களை வரச்சொன்னார். உங்களுக்காக வெயிட் பண்ணுகிறார்” எனச்சொன்னதும் சுராஜுக்கு ஜெர்க் அடிக்கிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

சிஇஓ யாருன்னா சாட்சாத் அவர் திரையில் ரசித்துப்பார்த்த மம்முட்டி. டென்ஷனோடு ரூமுக்கு போனதும் மம்முட்டி சந்தோஷமாக வரவேற்கிறார். “உன் ப்ரொக்ராம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த ஸ்லாங் நான் ஒரு படத்துல யூஸ் பண்ணலாமான்னு யோசிக்கிறேன். அப்போ நீ வந்து ஹெல்ப் பண்ணனும்…”

கேட்பது யார்?…மெகாஸ்டார் மம்முட்டி. அதோடு மம்முட்டியை சந்தித்த சந்தோஷத்தோடு வெளி வருகிறார் சுராஜ். மாதங்கள் வருடங்கள் ஆகிறது. சுராஜ் இப்போது மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாகிறார். சில சினிமாக்களில் தலை காட்டுகிறார். இவரை வைத்து ஒரு மிமிக்ரி படம் ஒன்றை எடுக்கிறார்கள். அது படு தோல்வியடைய டிவி சீரியல்ளில் நடிக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் சுராஜுக்கு திருமணமாகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

சில மாதங்களுக்குப்பிறகு மம்முட்டியிடமிருந்து அழைப்பு வருகிறது. “டேய்…ராஜ மாணிக்கம் அப்படின்னு ஒரு படம் எடுக்கிறோம். பொள்ளாச்சியில் ஷுட்டிங். நீ அங்கே வந்து விடு…” சொன்னது மம்முட்டி..

மம்முட்டி அழைத்த விபரம் ஊருக்குள் பரவுகிறது. மம்முட்டியோடு நடிக்கப்போவதாக பலரும் நினைக்கிறார்கள். சொன்ன படி பொள்ளாச்சி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகிறார் சுராஜ். அங்கே மம்முட்டி காஸ்ட்யூமரை கோபமாக திட்டிக்கொண்டிருக்கிறார். மம்முட்டியின் ஜிப்பா டைட்டாக இருப்பதால் கோபம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சுராஜ் ஒரு மாதிரியாக ஆகிறார். இவ்வளவு கோபமான மனுஷனா இருக்கிறாரே என பயம் வருகிறது. கோபமெல்லாம் தணிந்த பிறகு மம்முட்டியை சந்திக்கிறார் சுராஜ். “ஏய்..வந்துட்டியா? அது ஒண்ணுமில்லை…திருவனந்தபுரம் ஸ்லாங் பேசும் ஒரு கேரக்டர் என்னோடது. ஒரு மாதிரி பேசுறதுக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீ அதை கொஞ்சம் ஸ்பாட்டில் கரெக்ஷன் பண்ணனும்….” எனச்சொல்லி விட்டு மிகவும் கேஷூவலாக பேசிய மம்முட்டியை வியந்து பார்க்கிறார் சுராஜ்.

ராஜமாணிக்கம் படத்தில் மம்முட்டி ‘பெல்லாரி ராஜா’வாக நடித்திருப்பார். கருப்பு வேட்டிக்கு மேலே கலர் கலராக ஜிப்பா, கூலிங் கிளாஸ் சகிதம் ‘தள்ளே…புலியாணு கேட்டா” எனப்பேசும் டயலாகுக்கு தியேட்டரில் விசில் பறக்கும். ஒரு கண் பார்வை இல்லாததால் எப்போதும் கூலர்ஸோடு தான் வருவார்.

ஷாட்டில் ஒரு சண்டைக்காட்சி முடிந்ததும் “தள்ளே…புலியாணு இவன்….” என டயாலக் பேசி விட்டு ஷாட் ஓகே ஆனதும் கேரவனுக்குப்போகிறார் மம்முட்டி. ஆனால் சுராஜுக்கு டயலாக் பேசியதில் ஓகே இல்லை. அவர் நேரே இயக்குனரிடம் சொல்ல அவர் பயந்து பின் வாங்க சுராஜே தைரியமாக மம்முட்டியை சந்தித்து கடைசி ஷாட் திரும்ப எடுக்க வேண்டும் எனச்சொல்கிறார். மம்முட்டி கன்வின்ஸ் ஆகும் அளவுக்கு சுராஜ் பேசிக்காட்டியதும், மம்முட்டி கேரவனிலிருந்து வந்து “அவன் ஆசைப்படுகிறான்…இன்னொரு ஷாட் அவனுக்காக எடுப்போம்….” எனச்சொல்லி…”தள்ளே…புலியாணு இவன்..அதும் வெறும் புலியல்ல…கழுதப்புலி….” என சுராஜின் அடிஷனல் டயலாகோடு பேசிய அந்த ஷாட் தியேட்டரில் பெரும் கை தட்டலையும் சிரிப்பு ஆரவாரத்தையும் பெற்றுத்தந்தது.

அப்படி ராஜமாணிக்கம் படத்தின் பெருவெற்றிக்குப்பின்னால் சுராஜின் உழைப்பு இருந்தது. படிப்படிப்படியாக ‘ரஸிகன்’ என்கிற படத்தில் மம்முட்டி ரசிகர் மன்றத்தலைவனாக சில காட்சிகள் நடித்து மம்முட்டியின் கையாளாக ‘துருப்பு குலான்’ படத்தில் நடித்து பின் மாயாவி படத்தில் முழுநேரக்காமெடியனாகவும் ஆனார் சுராஜ். பின் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகி, நாயகனாகி….தன் ஊரான வெஞ்ஞாரமூடு பெயரை சேர்த்து…சுராஜ் வெஞ்ஞாரமூடு என்கிற நடிகனாகிறார்….

சிறிய வயதில் சைக்கிள் விபத்தில் கை முறிந்து போனதால் படத்தில் அவரது ஒரு கை உயரக்குறைவு பார்வையாளர்களுக்கு தெரியாமலேயே படங்களில் நடித்து தேசிய விருது வரை சென்றிருக்கிறார் என்றால்….

மம்முட்டி என்கிற மெகா மனிதரோடு சேர்ந்த சுராஜ் சேர்ந்த அந்த தருணம் தான். வெற்றிகள் உழைப்பினால் மட்டும் வருவதில்லை. சில சேர்க்கைகளால் தான் சாத்தியமாகிறது.

செல்வன் அன்பு
செல்வன் அன்பு

செல்வன் அன்பு

டிஜிட்டல் படைப்பாளி 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.