பிரபல இளைஞர்கள் பட்டையை கிளப்பும் கவியாட்டம்
தூங்காத கண்ணொன்று....
மெர்குரி விளக்குகளின்
மஞ்சளொளி பூசிய
சாலையின் ஓரம்
நீட்டி நெளித்து
ஆழ்ந்த நித்திரையினை
அணைத்தபடி
செம்பழுப்பு நிற நாயொன்று
நேற்றைய மனிதர்களோடு
கோபித்துக் கொண்டதுபோல்
முகம் திருப்பிக் கொண்ட சூரியன்…