கிராமசபைக் கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்…! வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகள்..!

0

கிராமசபைக் கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்…! வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகள்..!

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற் குட்பட்ட குண்டூர் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் மே தினத்தன்று திருவளர்ச்சிப்பட்டியில் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமி தலைமை தாங்கினார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

கூட்டத்தை நடத்த வேண்டிய ஊராட்சி மன்றச் செயலர் அமைதியாக இருக்க, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் திருமுருகன் கூட்டத்தை முன்னின்று நடத்தினார். இக்கூட்டத்தில் தங்கள்தங்கள் பகுதி யில் நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்களை குறித்த கோரிக்கைகளை வாசித்து, அவற்றை ஊராட்சி மன்றத் தலைவரிடம் கொடுத் தனர். கோரிக்கைகள் மீது தலைவர் லெட்சுமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவரின் கணவர் திருமுருகன், கோரிக்கையை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

கிராம சபை கூட்டத்தை நடத்திய தலைவரின் கணவர்
கிராம சபை கூட்டத்தை நடத்திய தலைவரின் கணவர்

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அப்போது கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத் தலைவர் தி.நெடுஞ்செழியன் திருமுருகனைப் பார்த்து, “நீங்கள் எந்தத் தகுதியில் ஊராட்சி மன்றத்தின் சார்பில் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்? உங்களுக்கு அந்த உரிமை இல்லை” என்று சொன்னவுடன், திருமுருகன் ஒதுங்கி நின்று கொண்டார். பின்னர், ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமி பதில்களைத் தட்டுத்தடுமாறிச் சொல்லிக் கொண்டிருந்தார். இதையடுத்து, மனைவியின் அருகே அமர்ந்து, தலைவர் சொல்ல வேண்டிய பதில்களைச் மீண்டும் அவரது கணவரே சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் கேலிக்கூத்தைக் குண்டூர் கிராமசபைக் கூட்டம் நகைச்சுவையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அடுத்து, மக்கள் கொடுக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றவேண்டும் என்று குடியிருப்போர் நலச் சங்கங்கள், பொது நல அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப் பட்டது. உடனே ஊராட்சி மன்றச் செயலர் எழுந்து, “ஆட்சித் தலைவர் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை அனுப்பி வைத்துள்ளார். அதைத்தான் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றமுடியும். பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கைகளைத் தீர்மானமாக நிறைவேற்ற முடியாது” என்றவுடன் கிராமசபைக் கூட்டத்தில் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது. பொதுநல அமைப்பின் சார்பில் ஒருவர் எழுந்து, “பொதுமக்கள் கோரிக்கைகளைத் தீர்மானமாக நிறைவேற்றமுடியாது என்று சொல்வது கிராமசபைக் கூட்டத்தின் பொருண்மையைப் புரிந்துகொள்ளாமல் சொல்வதாகும்.

டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடையை மூட வேண்டும் என்று கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கை கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற் றப்பட்டது. அப்போதைய அதிமுக அரசு தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. நீதிமன்றத் தீர்ப்பில், ‘கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உச்சநீதி மன்றத்தையே கட்டுப்படுத்தும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கிராமசபைக் கூட்டம் மக்களின் கோரிக்கைகளைத் தீர்மானமாக நிறைவேற்ற உரிமை படைத்தது” என்று உரத்த குரலில் சொன்னார். இதையடுத்து ஊராட்சி மன்றச் செயலாளர் BDO-விடம் கேட்டுக் கொள்கிறேன்.

தீர்மானம் நிறைவேற்றலாம் என்றால் நிறைவேற்றிவிடுகிறேன்” என்று சொல்லி BDOவிடம் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஓர் அலுவலரும் கலந்து கொண்டிருந்தார். இந்தக் கேலிக்கூத்துகளுக்கு அவரே முக்கியச் சாட்சியாகவும் இருந்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவான விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுநலச் சங்கங்களின் கோரிக்கையாகும்.

-ஆசைத்தம்பி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.