நானியின் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ டிரெய்லர் ரிலீஸ்!
தெலுங்கு சினிமாவின் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே.01-ஆம் தேதி வெளியாகும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ டிரெய்லர் இப்போது ரிலீஸ் ஆகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் ‘வால் போஸ்டர் சினிமா’ பேனரில் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் திபிர்னேனியுடன் நானியின் தயாரிப்பு நிறுவனமான யுனானிமஸ் புரொடக்சனும் கைகோர்த்து ள்ளது.
நானியின் சிறந்த படமாக ‘ஹிட்: இருக்கும் என்பதை டிரெய்லர் கன்ஃபார்ம் பண்ணியுள்ளது. படத்தில் ‘அர்ஜுன் சர்க்கார்’ கேரக்டரில் உடல் மொழியை யும் பேச்சையும் நுணுக்கமாக கையாண்டிருக்கிறார் நானி. கோபம் மற்றும் பழிவாங்கலால் தூண்டப்பட்ட ஒரு மனிதனை திரையில் பிரதிபலிக்கிறார். நானியின் காதலியாக வருகிறார் ஸ்ரீநிதி ஷெட்டி .
இயக்குநர் சைலேஷ் கொலானு ‘ஹிட்: தி தேர்ட் கேஸ் ‘ மூலம் க்ரைம் திரில்லர் படங்களில் தேர்ச்சி பெற்றவர் என்ற தனது பெயரை உறுதிப்படுத்துகிறார். ரசிகர்களை இருக்கையில் நுனியில் அமர வைக்கும் கதையை வடிவமைத்துள்ளார். நானியை இதற்கு முன் பார்த்திராத அவதாரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
காட்சி ரீதியாக படம் பிரமிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஷானு வர்கீஸ் ஒவ்வொரு நுணுக்கத்தையும் துல்லியத்துடனும், ஆழத்துடனும் படம் பிடித்திருக்கிறார்.
மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே. மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ் . ஆர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஸ்ரீ நாகேந்திர தங்காலா
நிர்வாக தயாரிப்பாளர் : வெங்கட்
ஒலிக் கலவை : ஜி .சுரேன்
லைன் புரொடியுசர் : அபிலாஷ் மந்தபு
ஆடை வடிவமைப்பாளர் : நானி கமரூசு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ.
— மதுரை மாறன்.