அங்குசம் பார்வையில் ‘தீராக்காதல்’

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தயாரிப்பு: ’லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ சுபாஸ்கரன். டைரக்‌ஷன்: ரோகின் வெங்கடேசன். நடிகர்—நடிகைகள்: ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி விர்த்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத்கான். ஒளிப்பதிவு: ரவிவர்மன் நீலமேகம், இசை: சித்து குமார், எடிட்டிங்: பிரசன்னா ஜி.கே., பி.ஆர்.ஓ.யுவராஜ்.

கொட்டும் மழை, சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். ஜெய்யும் பேபி விர்த்தி விஷாலும் பிளாட்பார்மில் ஜாலியாக விளையாடுகிறார்கள். ஜெய்யை வழியனுப்ப, மனைவி ஷிவதா வந்து கொண்டிருக்கிறார். அதே சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி, ஐஸ்வர்யா ராஜேஷும் வந்து கொண்டிருக்கிறார். கடுப்புடன் காரை ஓட்டி வருபவர் அவரது கணவர் அம்ஜத்கான். டிராபிக் சிக்னல் அக்கப்போரில் இன்னொருவருடன் வாய்த்தகராறு ஏற்பட, ஐஸ்வர்யா ராஜேஷின் கன்னத்தில் பளார்விடுகிறார் அம்ஜத்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அப்போதே நமக்கு கதையின் போக்கு ஓரளவு புரிந்துவிடுகிறது. வழியனுப்ப வந்த ஷிவதா, குழந்தையுடன் திருப்பிச் செல்ல, ஐஸ்வர்யா ராஜேஷ் கிராஸ் பண்ணுகிறார். ரைட்டு, ஜெய்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஏதோ லிங்க் இருக்கு, இருக்கணும்னு முழுசும் புரிஞ்சு போச்சு. நாம நினைச்சது போலவே பாலக்காடு ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போதே ஜெய்யும் ஐஸ்வர்யா ராஜேஷும் சந்திக்கிறார்கள். ரெண்டு பேருமே மாஜி லவ்வர்ஸ் என்பது கன்ஃபார்ம் ஆகிறது. அதுக்குப் பிறகு ரெண்டு பேரின் வாழ்க்கையில் ‘தீராக்காதல்’ உள்ளே நுழைந்து என்ன செய்கிறது என்பது தான் கதை.

3

கே.பாலசந்தர் காலத்துக் கதைகள் சிலவற்றை ஒன்றாக கலக்கி, இந்த ஆண்ட்ராய்டு போன் காலத்திற்கேற்ப ஃபாஸ்ட்ஃபுட் ரெடி பண்ண முயற்சித்திருக்கிறார் டைரக்டர் ரோகின் வெங்கடேசன். ஆனால் அதை என்ன வகையான டேஸ்டில் கொடுக்கலாம் என்பதில் கன்ஃபியூஸ் ஆகிவிட்டதால், ஃபுட் பிரிபரேஷன் ஃபெயிலியராகிவிட்டது. அவரவர் வேலை விசயமாக சென்னையிலிருந்து மங்களூர் போகிறார்கள், ஜெய்யும் ஐஸ்வர்யா ராஜேஷும். அங்கே செல்போனில் பேசுகிறார்கள், நேரில் சந்திக்கிறார்கள், தங்களின் குடும்ப வாழ்க்கையைப் பேசுகிறார்கள். ”உன்னோட வாழ விரும்புறேன்” எனச் சொல்லியபடி ஜெய்யைக் கட்டித்தழுவுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த இடத்திலேயே   டேமேஜாகிவிடுகிறது ஸ்கிரிப்ட்.   முதலில் ஜெய் சென்னை திரும்புகிறார். அப்புறம் ஐஸு திரும்புகிறார். மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள், விலகுகிறார்கள்.

ஒருகட்டத்தில், ஜெய் தன்னை ‘ரிஜெக்ட்’ பண்ணுவதை சகிக்க முடியாத ஐஸு, ஜெய்—ஷிவதா வசிக்கும் பிளாட்டிற்கு எதிர் பிளாட்டில் குடியேறுகிறார். (என்னமோ தாலி கட்ன புருஷன் தனக்குத் துரோகம் பண்ணிட்டு, வேறொருத்தியுடன் எப்படி வாழலாம். அதை குளோஸ் பண்ணியே ஆகணும்கிற மாதிரில்ல இருக்கு.) “ஒன்னோட பொண்டாட்டிய விட்டுட்டு வா. நாம ரெண்டு பேரும் ஒடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்கிறார் ஐஸு. இதையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்குறது டைரக்டரே?.

4

ஜெய்க்குப் பொருத்தமான சட்டைதான், ஆனா செட்டாகலைங்கிற கதையா இருக்கு. ஏன்னா கொடுமைக்கார கணவனின் கதை ஐஸுக்கு இருக்கு. ஆனா ஜெய்யின் மனைவி ஷிவதா கொடுமைக்காரியாகவோ, கோபக்காரியாகவோ காட்டப்படாத போது, ஐஸுவே வலிய வலிய வந்து ஜெய்யிடம் உருகுவது, கடுகடுப்பு காட்டுவதெல்லாம் பெண்களை தரம் தாழ்த்தும் சீன்கள்.

பலவீனமான திரைக்கதையால், ஒளிப்பதிவு, இசை இவற்றின் மீது கவனம் திரும்பவில்லை.

‘தீராக்காதல்’ “ஏதோ இருக்கு” என்ற ரேஞ்சில் தான் இருக்கு.

–மதுரைமாறன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.